• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Malik: மத அரசியலை பேசும் மாலிக் - மோதலை விளைவிக்குமா?

Malik: மத அரசியலை பேசும் மாலிக் - மோதலை விளைவிக்குமா?

ஃபகத் பாசில்

ஃபகத் பாசில்

மலையாள சினிமா உலகம் வேறு மாதிரி. மேனன், குறுப்பு, நம்பூதிரி என்று சாதிப் பெயரிலேயே கதாபாத்திரங்களை அமைப்பார்கள்.

  • Share this:
    சாதி, மத அரசியல் பின்னணியில் ஒரு படத்தை தமிழில் நினைத்துப் பார்ப்பதே அரிது. பரியேறும் பெருமாள், கர்ணன் என சாதி அரசியலை பேசும் படங்களில் கூட, யார் என்ன சாதி என்பது எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஒரு தரப்பு தாழ்த்தப்பட்டவர்கள், இன்னொரு தரப்பு ஆதிக்க சாதி. இதற்கு மேல் 'இந்த' சாதி என்று அடையாளப்படுத்தும் துணிச்சல் இங்கு யாருக்கும் இல்லை. அப்படியே துணிந்து சொன்னால் படம் வெளியே வராது.

    ஆனால், மலையாள சினிமா உலகம் வேறு மாதிரி. மேனன், குறுப்பு, நம்பூதிரி என்று சாதிப் பெயரிலேயே கதாபாத்திரங்களை அமைப்பார்கள். மம்முட்டியின் புதிய படம் ஒன். இதன் ட்ரெய்லரின் முதல் வசனம், "அம்பட்டன் மகனை பிடித்து முதலமைச்சராக்கினால் இப்படித்தான் இருக்கும்" என்று வருகிறது. அம்பட்டன் என்றால் முடிதிருத்தும் சாதி. படத்தின் ட்ரெய்லருக்கு எதிர்ப்போ, சின்ன முணுமுணுப்போ இல்லை. சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்கும் மலையாளிகளின் பக்குவம் இதற்கு முக்கிய காரணம்.

    பகத் பாசில் நடித்துள்ள மாலிக் திரைப்படம் மே 13 திரைக்கு வருகிறது. இரு மதத்தினரிடையே ஏற்பட்ட மோதலை பற்றிய திரைப்படம் இது. முக்கியமாக முஸ்லீம்கள் குறித்து படத்தில் நிறைய பேசப்பட்டிருக்கிறது. மத அரசியலை நுட்பமாக பேசியிருக்கிறார்கள். இந்தப் படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. மத அரசியல் காரணமில்லை. ஏனெனில் படத்தை தயாரித்திருக்கும் ஆன்டோ ஜோசப் ஒரு கிறிஸ்தவர். இயக்கியிருக்கும் மகேஷ் நாராயணன் ஓர் இந்து. நாயகன் பகத் பாசில் ஒரு முஸ்லீம். அப்புறம் என்ன பிரச்சனை?

    மம்முட்டி போன்ற மெகா ஸ்டாரின் படமும், சன்னி வெய்ன் போன்ற சின்ன நடிகரின் படமும் திரையரங்குகளில் வெளியாகும் நேரம், பகத் பாசிலின் ’சீ யூ சூன்’, ’இருள்’, ’ஜோஜி’ மூன்றும் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனால், அவரது படங்களை திரையரங்கில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்கிறது ஒரு தரப்பு. ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், அப்படி எதுவும் தடை விதிக்கவில்லை. பகத் பாசிலின் படத்தை திரையிட தயாராக உள்ளோம் என அறிவித்துள்ளது. எனினும் மே 13-ம் தேதியன்றே விடை தெரியும்.

    ஓடிடி தளத்தில் வெளியான பகத்தின் மூன்று படங்களும் ஓடிடி யில் வெளியிடுவதற்கு என்றே தயாரிக்கப்பட்டவை. மாலிக் அப்படியல்ல. அதனால், மாலிக் திரையரங்கில் மட்டுமே முதலில் வெளியாகும் என அடித்து கூறுகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: