ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பகத் பாசில் படத்திற்கு ரஹ்மான் இசை... கவனம் ஈர்க்கும் 'மலையன்குஞ்சு' ட்ரெய்லர்

பகத் பாசில் படத்திற்கு ரஹ்மான் இசை... கவனம் ஈர்க்கும் 'மலையன்குஞ்சு' ட்ரெய்லர்

பகத் பாசில்

பகத் பாசில்

பகத் ஃபாசில் அண்ட் ஃபிரண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இயக்குனர் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடித்துள்ள மலையன் குஞ்சு திரைப்படம் ட்ரெய்லர் வெளியாகி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குநர் சஜிமோன் இயக்கத்தில் பகத் பாசில் நடிக்கும் திரைப்படம் 'மலையன்குஞ்சு'. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி, ஒளிப்பதிவு செய்கிறார் 'மாலிக்' பட இயக்குநர் மகேஷ் நாராயணன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜிஷா விஜயன், இன்தரன்ஸ், ஜாஃபர் இடுக்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பகத் ஃபாசில் அண்ட் ஃபிரண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படதின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: A.R.Rahman, Entertainment