தியாகராஜன் குமாராஜாவுடன் மீண்டும் கரம் கோர்க்கும் ஃபகத் பாசில்

தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அடுத்த படத்தில் ஃபகத் பாசில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தியாகராஜன் குமாராஜாவுடன் மீண்டும் கரம் கோர்க்கும் ஃபகத் பாசில்
ஃபகத் பாசில் | தியாகராஜன் குமாரராஜா
  • Share this:
2011-ம் ஆண்டு வெளியான ஆரண்யகாண்டம் படத்தின் மூலம் ரசிகர்களையும் திரைத்துறையையும் திரும்பிப்பார்க்க வைத்தவர் தியாகராஜன் குமாரராஜா. முதல் படமே விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றாலும் 8 வருடங்களுக்கு பின்னர் சூப்பர் டீலக்ஸ் என்ற இவரது இரண்டாவது படம் வெளியானது.

சமந்தா, விஜய் சேதுபதி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் திரை விமர்சகர்களாலும், திரை பிரபலங்களாலும் கொண்டாடப்பட்டது. அதேவேளையில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு பின்னர் இதுவரை தனது படம் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் தியாகராஜன் குமாரராஜா வெளியிடவில்லை. இந்நிலையில் அவர் இயக்கும் அடுத்த படத்திலும் ஃபகத் பாசில் நடிப்பார் என்று தெரிய வருகிறது.


சமீபத்தில் ஃபகத் பாசில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் கண்டிப்பாக அவரது அடுத்த படத்தில் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தியாகராஜன் குமாரராஜா - ஃபகத் பாசில் கூட்டணி மீண்டும் இணைய இருப்பது உறுதியாகியுள்ளது.
படிக்க: BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்புபடிக்க: ஈரானை அடுத்து இலங்கையும்...! ரத்தாகும் இந்தியா உடனான திட்டங்கள்
சூப்பர் டீலக்ஸ் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கப்போகும் திரைப்படம் எப்படி இருக்கும். நடிகர்கள் யார் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களையும் தாண்டி திரைத்துறையினர் மத்தியிலும் இருக்கிறது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading