Home /News /entertainment /

உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பில் ஃபகத் ஃபாசில்!

உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பில் ஃபகத் ஃபாசில்!

பகத் பாசில்

பகத் பாசில்

'மாமன்னன்' படத்தில் உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி வேடங்களில் நடிக்க, ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    வரும் 20-ம் தேதி முதல் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படப்பிடிப்பில் கலந்துக் கொள்கிறார் நடிகர் ஃபகத் ஃபாசில்.

    'வேலைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஃபஹத் பாசில், தற்போது பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மே 20-ஆம் தேதி முதல் 'மாமன்னன்' படப்பிடிப்பில் அவர் கலந்துக் கொள்ளவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' படத்தில் ஃபகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சேலத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு. ஆனால் ஃபஹத் பாசில் இன்னும் படத்திற்கான வேலையைத் தொடங்கவில்லை, மேலும் மே 20 முதல் அவர் மாமன்னன் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    'மாமன்னன்' படத்துடன் நடிப்பதை நிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், விரைவில் படத்தின் வேலைகளை முடித்துக் கொடுக்க நினைத்துள்ளாராம். எனவே, 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலைக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படமும் இயக்குனரின் முந்தைய இரண்டு படங்களான 'பரியேறும் பெருமாள்' மற்றும் 'கர்ணன்' போல சர்ச்சைகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கமல் ஹாசனின் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி, விஜய், சூர்யா?

    'மாமன்னன்' படத்தில் உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி வேடங்களில் நடிக்க, ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தின் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தயாரிப்பாளர்கள் வலுவான அணியை உருவாக்கியுள்ளனர்.

    கமல் ஹாசனின் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி, விஜய், சூர்யா?

    இதற்கிடையே, கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஃபஹத் ஃபாசில், இன்று சென்னையில் நடைபெற உள்ள பிரமாண்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி