• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் படத்தில் ஃபகத் ஃபாசில்?

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் படத்தில் ஃபகத் ஃபாசில்?

உதயநிதி - ஃபகத்

உதயநிதி - ஃபகத்

அரசியலில் முழு கவனம் செலுத்தப் போகும் உதய், இறுதியாக நடிக்கும் படம் இதுதான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

  • Share this:
    இயக்குநர் மாரி செல்வராஜ் படத்திற்காக உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசிலுடன் இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    ’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகியப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து புதிய படமொன்றை இயக்க தயாரானார். இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனக்கொரு படம் இயக்கக் கேட்டுக் கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும், மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் படம் தொடங்கவிருக்கிறது. அரசியலில் முழு கவனம் செலுத்தப் போகும் உதய், இறுதியாக நடிக்கும் படம் இதுதான் என்கிறது கோலிவுட் வட்டாரம். படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

    இந்நிலையில் இந்தப் படம் குறித்த சமீபத்திய தகவல் என்னவென்றால், உதயநிதி - மாரி செல்வராஜ் படத்தில் ஃபஹத் ஃபாசில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இவர் தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதியும் நடிக்கிறார். தவிர அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார் ஃபகத். இந்தப் படம் தமிழிலும் வெளியாகிறது.

    தவிர ஃபகத் ஃபாசில் மலையாளத்தில் நடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நிமிர்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    செய்தியை ஆடியோவில் கேட்க...




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: