ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் தளபதி 67 படத்தில் பகத் பாசில்?

விஜய்யின் தளபதி 67 படத்தில் பகத் பாசில்?

விஜய் - பகத் பாசில்

விஜய் - பகத் பாசில்

லோகேஷ் கனகராஜின் கடைசியாக இயக்கியிருந்த விக்ரம் படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய்யின் தளபதி 67 படத்தில் தான் நடிக்க வாய்ப்பிருப்பதாக நடிகர் ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.

நடிகர்-தயாரிப்பாளர் ஃபஹத் ஃபாசில் விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான தளபதி 67 படம் பற்றிய ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இந்தத் திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சினிமா பிரபஞ்சத்தின் ஒரு பகுதி, அதாவது LCU-வாக உருவாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தளபதி 67 படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, அது LCU-வாக உருவாகவிருப்பதால், நான் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார் ஃபகத் ஃபாசில். தனது தயாரிப்பில் உருவாகியிருக்கும் தங்கம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் இதைத் தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜின் கடைசியாக இயக்கியிருந்த விக்ரம் படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஃபஹத் பாசில் அதில் அமர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படத்தின் முடிவில், ஒரு அனுபவமிக்க உளவாளியாக இருந்த அமர், அதனை விட்டு விட்டு தனது மனைவியின் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க தயாரானதாகக் காட்டப்பட்டது.

சர்ஜரி செய்துக் கொள்ளலாமா என நினைத்தேன்... அனன்யா பாண்டே உருக்கம்

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர்கள் இதுவரை எந்த விபரங்களையும் வெளியிடவில்லை. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay