நடிகர் விஜய் சேதுபதி நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் நடிகர் பகத் ஃபாசில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். புஷ்பா படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதல், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பவர் ஃபுல்லான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதி அணுகப் பட்டார். ஆனால் கால்ஷீட் பிரச்னையின் காரணமாக, அவர் அதிலிருந்து விலகினார். பின்னர் இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது புஷ்பா படத்தில் வில்லனாக நடிகர் பகத் ஃபாசில் ஒப்பந்தமாகியுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இது தான்! இதனை #VillainOfPushpa என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்!