Home /News /entertainment /

ரியாக்‌ஷன்களால் ரசிகர்களை கவரும் எக்ஸ்பிரஷன்ஸ் குயின் ராஷ்மிகா மந்தனா!

ரியாக்‌ஷன்களால் ரசிகர்களை கவரும் எக்ஸ்பிரஷன்ஸ் குயின் ராஷ்மிகா மந்தனா!

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

எங்கு சென்றாலும் அவரது குழந்தைத் தனமான பேச்சு பலரை கவர்வதும், சிலரை எரிச்சலூட்டும் அவ்வப்போது நடந்து வருகிறது.

    இந்திய சினிமாவின் எக்ஸ்பிரஷன் குயின் ஆக மாறி இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. 60 வினாடிக்குள் 6000 எக்ஸ்பிரஷன் கொடுக்கும் அவரது முகம் தற்போது இணையதளத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.

    கொடுத்த காசுக்கு மேல கூவுறான் என்ற வடிவேலு காமெடியோடு தற்போது ட்ரெண்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் நடிப்பில் அடுத்து உருவாகும் புதிய திரைப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கும் ராஷ்மிகா மந்தனா, பட பூஜையில் விஜய்யை பார்த்தவுடன் வெளிப்படுத்திய உற்சாக முகபாவங்கள் க்யூட் என ஒரு தரப்பும், ஓவர் ஆக்டிங் என ஒரு தரப்பும் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

    கீதா கோவிந்தம் திரைப்படத்தில் சேலைகட்டும் சீனில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவரைப் போலவே பெண்கள் சேலை கட்டி இன்ஸ்டாகிராம் மேலும் டிக் டாக் செயலிலும் வீடியோக்களை பதிவேற்ற ஓவர் நைட்டில் பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா.



    எங்கு சென்றாலும் அவரது குழந்தைத் தனமான பேச்சு பலரை கவர்வதும், சிலரை எரிச்சலூட்டும் அவ்வப்போது நடந்து வருகிறது. தமிழில் சுல்தான் படத்தில் நாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா மேடைக்கு வரும் பொழுது அனைவருக்கும் கை கொடுத்து வந்த விதம் இணையத்தில் meme கிரேட்டர் மத்தியில் வைரல் கண்டண்ட் ஆனது.

    Happy Birthday Parvathy: மிஸ் பண்ணக் கூடாத பார்வதியின் 5 படங்கள்!



    தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தில் ராஷ்மிகா ஆடிய சாமி சாமி பாடல் ஸ்டெப்பை எந்த மேடைக்கு போனாலும் ஆடிக்காட்டி அவர் செய்த சேட்டைகளும் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

    ஆல்யா மானசா தனது மகனை முதன்முறையாக கைகளில் வாங்கிய தருணம் - வைரலாகும் வீடியோ!



    இவர் க்யூட்டாக தெரிய இதை செய்கிறாரா, இல்லை இவர் இயல்பிலேயே இப்படி துருதுருவென இருப்பாரா என தொடர்ந்து இணையதளத்தில் விவாதங்கள் நடந்தாலும், எங்கு சென்றாலும் தனது கியூட் ரியாக்ஷனை நிறுத்துவதில்லை ராஷ்மிகா மந்தனா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Rashmika Mandanna

    அடுத்த செய்தி