Home /News /entertainment /

நடிகர் சிவாஜி எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்படவில்லை.. உயர் நீதிமன்றத்தில் ராம்குமார், பிரபு தரப்பில் வாதம்

நடிகர் சிவாஜி எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்படவில்லை.. உயர் நீதிமன்றத்தில் ராம்குமார், பிரபு தரப்பில் வாதம்

சிவாஜி மற்றும் பிரபு

சிவாஜி மற்றும் பிரபு

நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என அவரின் மகன்கள் ராம்குமார், பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், அவருக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    அந்த மனுவில், சொத்துக்களில் தங்களுக்கும் பங்கு இருப்பதாகவும், தங்களுக்கு உரிய பங்கை பிரித்து தர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து சொத்துக்களிலும் சமபங்கு உள்ளதாக கூறி ராம்குமார், தங்களிடமும் (சாந்தி, ராஜ்வி), பிரபுவிடமும் 2013ல் பொது அதிகார பத்திரத்தை எழுதிப் பெற்றதாக தெரிவித்தார்.

    1999ல் எழுதப்பட்ட பதிவு செய்யப்படாத நடிகர் சிவாஜியின் உயில் 2021ல் தான் வெளிவந்தது எனவும், அதில் தங்களுக்கு சொத்தில் உரிமையில்லை என கூறப்பட்டுள்ளதாகவும், உயிலை மெய்ப்பித்து சான்று கோரிய வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். நடிகர் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது எனவும், உயில் சட்டபடி மெய்ப்பித்து சான்று பெறாததால் அது செல்லத்தக்கதல்ல என்றும் சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதிடப்பட்டது.

    Also see... யாருக்கெல்லாம் மின் கட்டணம் உயர்வு... முழு தகவல்

    இதுதொடர்பாக மீண்டும் நடைபெற்ற விசாரணையில், மனுதாரர்கள் தொடர்ந்து உயிலின் நம்பகத்தன்மை குறித்தும், அது பொய்யானது என்றும் கூறி வருவதாக, ராம்குமார் மற்றும் பிரபு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும், உயிலின் அடிப்படையில்தான் சில பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    வாதங்கள் முடிவடையாததால், ராம்குமார் மற்றும் பிரபு தரப்பு வாதங்களுக்காக விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Actor Prabu, Chennai, Chennai High court, Sivaji Ganesan

    அடுத்த செய்தி