ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இயக்குநர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடப்பு தயாரிப்பாளர் சங்கம்!

இயக்குநர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடப்பு தயாரிப்பாளர் சங்கம்!

மணிரத்னத்தை சந்தித்த நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்

மணிரத்னத்தை சந்தித்த நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றியடைந்துள்ளது.  அந்த திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியால் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் பெருமிதம் கொள்கிறது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றியடைந்துள்ளது.  அந்த திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மேலும் பொன்னியின் செல்வன்  திரைப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் இயக்குநர் மணிரத்னத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.

அப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு அவர்கள் மணிரத்னத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.  அத்துடன் இந்த திரைப்படத்தின் வெற்றியால் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பெருமிதம் கொள்கிறது எனவும் கூறியுள்ளனர்.

Also read... சினிமாவின் மேஜிக்! படம் பிளாப்.. ஆனால் பலரையும் உச்சிக்கு கொண்டுசென்ற 'ஆல்பம் ' படம்!

இந்த சந்திப்பில் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த அம்மா கிரியேஷன் டி.சிவா, சத்ய ஜோதி தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொன்னியின் செல்வன் படம் சுமார் 450 கோடி ரூபாய் வசூல் செய்யும் என கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Mani rathnam, Ponniyin selvan