ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Exclusive : பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினி, கமல் இடம்பெறாதது ஏன்? மணிரத்னம் பதில்

Exclusive : பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினி, கமல் இடம்பெறாதது ஏன்? மணிரத்னம் பதில்

மணிரத்னம்

மணிரத்னம்

பொன்னியின் செல்வன் நாவலின் மீதுள்ள மரியாதையால் தாங்களும் படத்தில் இடம்பெற வேண்டும் என்று கமலும், ரஜினியும் கூறினார்கள். – மணிரத்னம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினி, கமல் இடம்பெறாதது ஏன் என்பது குறித்து இயக்குனர் மணிரத்னம் பதில் அளித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் படத்தில் தானும் இடம்பெற வேண்டும் என்பதை மணிரத்னமிடம் வெளிப்படுத்தியதாக கூறியிருந்தார். அதாவது பெரிய பழுவேட்டரையர் கேரக்டர் குறித்து மணிரத்னமிடம் ரஜினி பேசியிருந்தார்.

இதேபோன்று கமலும் இந்த படத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்தார். இருப்பினும் இருவரும் மணிரத்னம் உருவாக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறவில்லை.

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் பாகுபலி படம் மாதிரி இருக்குமா? மணிரத்னம் பதில்...

ஆனால் கமல் மட்டுமே ட்ரெய்லர் மற்றும் படத்தில் வாய்ஸ் ஓவர் செய்திருந்தார். இந்நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு அளித்த பேட்டியில் மணிரத்னம் கூறியதாவது-

எல்லா படத்திற்கும் நடிகர்களுடன் ஹோம்வொர்க் தேவைப்படும். ஆனால் இந்த படத்திற்கு 6 மாதத்திற்கு முன்பாகவே நடிகர்களுக்கான பயிற்சியை தொடங்கி விட்டோம்.

Ponniyin Selvan: சோழர்களை பழிவாங்கும் நந்தினி... ஏன் தெரியுமா?

பொன்னியின் செல்வனை படிக்கும் போது தான் தெரிகிறது கல்கி எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டு இந்த நாவலை படைத்து இருக்கிறார் என்று. இந்த படத்திற்காக உடை, தோற்றம் உள்ளிட்ட பல அம்சங்களை நாங்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டோம்.  இது தொடர்பாக வல்லுனர்கள் பலரிடம் கருத்துக்களை கேட்டோம்.

ரஜினி மற்றும் கமலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்கள் கல்கியின் மீது உள்ள மரியாதை, பொன்னியின் செல்வன் நாவலின் மீதுள்ள மரியாதையால் தாங்களும் படத்தில் இடம்பெற வேண்டும் என்று கூறினார்கள்.

' isDesktop="true" id="811019" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

கமல், ரஜினியை படத்தில் இடம் பெற வைக்கலாம். ஆனால் அதற்கு ஏற்ற வகையில் காட்சிகளை அவர்களுக்கு வைக்கவேண்டும். இருவருக்கும் ஏற்ற காட்சிகள், இல்லாததால் படத்தில் அவர்கள் இடம்பெறவில்லை.

தமிழில் கடந்த 70 ஆண்டுகளில் பொன்னியின் செல்வன் தான் மிகவும் அதிகமான விற்பனையான நாவலாக உள்ளது. பொன்னியின் செல்வன் படம் மிகைப்படுத்தி எடுக்கப்படவில்லை.  இது ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Published by:Musthak
First published:

Tags: Mani rathnam, Ponniyin selvan