முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அதிக சம்பளம் வாங்கும் விஷயத்தில் ஹீரோக்களை மட்டும் குறை சொல்ல முடியாது... உதயநிதி ஸ்டாலின் பேட்டி

அதிக சம்பளம் வாங்கும் விஷயத்தில் ஹீரோக்களை மட்டும் குறை சொல்ல முடியாது... உதயநிதி ஸ்டாலின் பேட்டி

நியூஸ் 18-க்கு சிறப்பு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்

நியூஸ் 18-க்கு சிறப்பு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்

ஆர்ட்டிஸ்டுகளை விடுங்கள், அனிமல்ஸை கூட கர்ணனில் நடிக்க வைத்துள்ளீர்கள் என்று மாரி செல்வராஜை பாராட்டினேன். - உதயநிதி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிக சம்பளம் வாங்கும் விஷயத்தில் ஹீரோக்களை மட்டும் குறை சொல்ல முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அதிக சம்பளம் வாங்குவதால், படத்தின் தரம் பாதிக்கப்படுவதாக விவாதம் எழுந்துள்ளது. அதாவது படத்தின் பட்ஜெட்டில் 50 முதல் 70 சதவீதம் வரையில் நடிகருக்கு மட்டுமே சென்று விடுவதாகவும், இதனால் தரமான படைப்பை உருவாக்குவதில் சவால் ஏற்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.

இதற்கு ஆதரவாக ஓரளவு சம்பளம் பெற்று இந்தியா முழுவதும் வசூலை ஏற்படுத்திய பாகுபலி, ஆர்ஆர்ஆர், கே.ஜி.எஃப்.2, புஷ்பா திரைப்படங்கள் உதாரணம் காட்டப்படுகின்றன.

முன்னணி நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கும் விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

பெரிய ஹீரோக்களின் சம்பளம் வேற லெவலுக்கு போய் விட்டது. ஒரு பெரிய பட்ஜெட் படத்தின், 60-70 சதவீதம் ஒருவருக்கே போய் விடுகிறது. இதனால் தான் எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும்?, நமக்கு படத்தை தயாரித்து வழங்க ஆட்கள் இருக்கிறார்கள். நாம் ரிலீஸ் மட்டும் செய்து விடலாம் என்ற முடிவில் உள்ளேன்.

இதையும் படிங்க - கே.ஜி.எஃப் 3 ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்...

இந்த விஷயத்தில் ஹீரோக்களை மட்டும் குறை சொல்ல முடியாது. ஹீரோக்கள் கேட்கும் சம்பளத்தை தருவதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

பரியேறும் பெருமாள் படத்திலிருந்தே மாரி செல்வராஜை எனக்கு நன்றாக தெரியும். கர்ணன் படத்தில் தேதி குறித்த சர்ச்சைபற்றி அவரிடம் தெரிவித்தேன். முந்தைய ஆட்சியில் நடந்த பிரச்னையை திமுக ஆட்சியில் நடந்ததைப் போன்று குறிப்பிட்டிருந்தார்கள். இதை அவரிடம் சொன்னதும், தவறு இருந்தால் எடுத்து விடலாம் என்று நீக்கி விட்டார்.

இதையும் படிங்க - கே.ஜி.எஃப் 3 ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்...

தொடர்ந்து அவரிடம் பேசியபோது, எனக்கொரு படம் பண்ணித்தருமாறு கேட்டேன். ஆர்ட்டிஸ்டுகளை விடுங்கள், அனிமல்ஸை கூட கர்ணனில் நடிக்க வைத்துள்ளீர்கள் என்று பாராட்டினேன். எனக்காக மற்ற கமிட்மென்ட்டுகளை தள்ளி வைத்து விட்டு மாமன்னன் படத்தை பண்ணுகிறார்.

கர்ணன் படத்தை பார்க்குமாறு வடிவேலு அண்ணனிடம் சொன்னேன். அவரும் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார். இந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறேன், நீங்களும் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் மாமன்னன் படத்தில் இடம்பெற்றார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Udhayanidhi Stalin