Home /News /entertainment /

Exclusive : அரசியல் செல்வாக்கால் பெரிய பட்ஜெட் படங்களை ரெட் ஜெயன்ட் மட்டுமே வாங்குகிறதா? உதயநிதி பதில்

Exclusive : அரசியல் செல்வாக்கால் பெரிய பட்ஜெட் படங்களை ரெட் ஜெயன்ட் மட்டுமே வாங்குகிறதா? உதயநிதி பதில்

நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் உதயநிதி ஸ்டாலின்

நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் உதயநிதி ஸ்டாலின்

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் ஏதோ வலுக்கட்டாயமாக படங்களை கைப்பற்றுவதாக தோன்றலாம். - உதயநிதி

    அரசியல் செல்வாக்கால் பெரிய பட்ஜெட் படங்களை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மட்டுமே வாங்கி குவிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதுகுறித்து நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

    2021-ம் ஆண்டு அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், 2022-ல் ராதே ஷ்யாம், காத்துவாக்குல ரெண்டு காதல், பீஸ்ட், விக்ரம், டான், திருச்சிற்றம்பலம் என பெரிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலானவற்றை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அரசியல் செல்வாக்கால், பெரிய பட்ஜெட் படங்களை உதயநிதி வளைத்துப் போடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நியூஸ் 18க்கு உதயநிதி அளித்த பேட்டியின்போது, இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது-

    ரெட் ஜெயன்ட் மீதான புகார்களை கேட்கும்போது காமெடியாக இருக்கிறது. நாம் என்ன செய்தாலும், ஒன்றுமே செய்யாவிட்டாலும் அதனை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். பொறாமையால் இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக கருதுகிறேன்.

    எங்களுக்கும் சன் பிக்சர்ஸ்-க்கும் 4ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்படி, சன்பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கும். ரெட்ஜெயன்ட் அதனை வெளியிடும். கொரோனா காரணமாக ஏற்கனவே உருவாக்கத்தில் இருந்த படங்கள் வெளியிடப்படாமல் தேங்கி விட்டன.

    இதையும் படிங்க - கே.ஜி.எஃப். 2 டைரக்டர், பாகுபலி பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் 'சலார்' படத்தின் சூப்பர் அப்டேட்...

    சன்பிக்சர்ஸ் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிப்பதால் அதனை நான் வெளியிடும்போது, விமர்சனம் எழுகிறது. சன் பிக்சர்ஸை தவிர்த்து, சிறிய பட்ஜெட் படங்கள் என்ற அளவில் எஃப்.ஐ.ஆர். படத்தை வெளியிட்டோம். அது வெற்றி பெற்றது. லைகா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது படங்களை வெளியிடுமாறு ரெட் ஜெயன்ட்டை கேட்டுக் கொண்டன. ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் ஏதோ வலுக்கட்டாயமாக படங்களை கைப்பற்றுவதாக தோன்றலாம்.

    இதையும் படிங்க - கே.ஜி.எஃப் 3 ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்...

    கமலின் விக்ரம் படத்தை பொருத்தவரை நானே கமல் சாரிடம் போன் செய்து, நான் படத்தை வெளியிட ஆர்வமாக இருப்பதாக கூறினேன். அவரும் நீங்கள் வெளியிடுவதாக இருந்தால் தாராளமாக அதற்கு சம்மதிக்கிறேன் என்றார். லைகாவும், சிவகார்த்திகேயனும், டான் படத்தை ரிலீஸ் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்கள். நேர்காணல் வீடியோவை பார்க்க...



    அதன் அடிப்படையில் டான் படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிட்டது.
    இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Udhayanidhi Stalin, Udhayanithi Satlin

    அடுத்த செய்தி