ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் பின்னணி இசை, பாடல்கள் குறித்து மணிரத்னம் பிரத்யேக பேட்டி….

பொன்னியின் செல்வன் பின்னணி இசை, பாடல்கள் குறித்து மணிரத்னம் பிரத்யேக பேட்டி….

மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான்

மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான்

பொன்னியின் செல்வன் என்னுடைய கனவு. நான்படித்ததில் இருந்தே இதை படமாக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இன்றைக்கு படமாக்கியதில் மிகவும் சந்தோஷம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு இயக்குனர் மணிரத்னம் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. மல்டி ஸ்டார்களைக் கொண்ட படம் என்பதாலும், இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படம் என்பதாலும் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 6 பாடல்களுமே வித்தியாசமாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்துள்ளன. ஏ.ஆர்.ரகுமான் கெரியரில் குறிப்பிடத் தகுந்த ஆல்பமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது. இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் மணிரத்னம் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

10 ஆம் நூற்றாண்டில் இசை எப்படி இருந்தது என்பது பற்றிய போதுமான தகவல்கள் இல்லை. சொல்லப்போனால், 10 ஆம் நூற்றாண்டுக்கு தேவையான இசைக்கு எங்குமே தகவல்கள் கிடையாது. 1940, 50 களில் வெளிவந்த சரித்திரப் படங்களில் என்ன இசை இருக்கிறதோ அதுதான் சோழர் கால இசை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை அதுவல்ல.

இயக்குனர் மணிரத்னம் பார்வையில் ‘பான் இந்தியா’ திரைப்படம்

அந்த காலகட்டத்திற்கு ஏற்ற, சாயலான இசை இருக்க வேண்டும். அதைத் தாண்டி கதையோட்டத்திற்கு ஏற்ற வகையில் இசை அமைய வேண்டும்.

அதற்காகத்தான் ரகுமான் பாலிக்கு சென்று சில தகவல்களைப் பெறலாம் என கூறினார். அங்கு சோழர்கள் சென்றதால் இசை குறித்த சில தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். Monkey Chants எனப்படும் இசையை பார்த்தோம். புல்லரிக்க செய்யும் வகையில் இருந்தது.

' isDesktop="true" id="811029" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

100-150 பேர் அமர்ந்து வாய் மூலமாக ஒலி எழுப்பி இசையை உருவாக்கினார்கள். அதிலிருந்து எங்களுக்கு இசைக்கான தொடக்கம் கிடைத்தது. அதிலிருந்து நாங்கள் பயணித்தோம்.

‘நாவலை அப்படியே படமாக்கினால் அது டாக்குமெண்டரி போல் ஆகிவிடும்’ – பொன்னியின் செல்வன் சுவாரசியத்தை விளக்கும் மணிரத்னம்

பாடலாசிரியர் இளங்கோவின் கவிதைகளை படித்துள்ளேன். இதுதொடர்பாக ஜெயமோகனுடனும் பேசியுள்ளேன். அவர்தான் இளங்கோ நல்ல தமிழ்புலமை வாய்ந்தவர் என்று கூறினார். அவருடன் முதல் பாடலை பண்ணும்போதே எனக்கு தெரிந்து விட்டது. இவர் தமிழ் புலமை, சொல்லாடலில் திறமை மிக்கவர் என்று.

பொன்னியின் செல்வன் என்னுடைய கனவு. நான்படித்ததில் இருந்தே இதை படமாக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இன்றைக்கு படமாக்கியதில் மிகவும் சந்தோஷம்.

வர்த்தக ரீதியில், விமர்சன ரீதியில் இந்தப் படம் வெற்றியாக வேண்டும். இவ்வளவு பெரிய பொருட் செலவில் படம் உருவாக்கப்படும் போது வர்த்தக ரீதியில் வெற்றி கிடைக்க வேண்டும்.

விமர்சன ரீதியான வெற்றி என்பது படைப்பாளருக்கான வெற்றி. அதையும் எதிர்பார்க்கிறேன். நான் தேர்வு செய்த அனைத்து கேரக்டர்கள், நடிகர்கள் எனக்கு திருப்தி அளிக்கிறது.

மக்கள் இந்த மாதிரியான எதிர்பார்ப்போடுதான் பார்க்க வேண்டும் என்ற எதுவும் கிடையாது. நாவலை படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கு ரீச் ஆக வேண்டும் என்றுதான் இந்த படத்தை ஆரம்பித்தோம். இது ஒரு கதை. கல்கி எப்படி கதை சொன்னாரோ, அதை திரைப்படமாக சொல்ல முயற்சித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Published by:Musthak
First published:

Tags: Mani rathnam, Ponniyin selvan