• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Exclusive : ''சூர்யாவுடன் அடுத்த படம்; விஜய் சாருடன் பேச்சுவார்த்தை'' News 18-க்கு 'அண்ணாத்த' சிவா பேட்டி

Exclusive : ''சூர்யாவுடன் அடுத்த படம்; விஜய் சாருடன் பேச்சுவார்த்தை'' News 18-க்கு 'அண்ணாத்த' சிவா பேட்டி

''வேதாளம் படத்தை பார்த்து விட்டு என்னை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து விஜய்சார் பாராட்டினார். அவருடனான நட்பு ரொம்ப அழகானது, ஆழமானது.''

  • Share this:
    ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் மீது கலவை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்த படத்தில் சூர்யாவை இயக்கவுள்ளதாக இயக்குனர் சிவா கூறியுள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

    நான் சிறுத்தை படத்தை பண்ணியிருந்தபோதே, அதைப்பார்த்து ரஜினி சார் பாராட்டினார். அதன் பின்னர் நாம் படம் பண்ணலாம் என்று கூறியிருந்தார். பத்தாண்டுகளுக்கு பிறகு அவருடன் 'அண்ணாத்த' இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணாத்த படத்தை நான் இயக்குவதற்கு அஜித் தான் முக்கிய காரணம்.

    விசுவாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி சார் என்னை நேரில் அழைத்து பாராட்டி, உடனடியாக படம் பண்ணலாம் என்றார். அதன் பின்னர்தான் அவருக்காக அண்ணாத்த படத்தின் கதையை எழுத ஆரம்பித்தேன். என்னுடைய எல்லா முயற்சிகளிலும் அஜித் சாரின் பங்கும், ஆசீர்வாதமும் இருக்கிறது. அண்ணாத்த படம் எனது கேரியரில் மிகப் பெரும் வெற்றி அடையும் என்று அஜித் சார் என்னை வாழ்த்தினார்.



    எனது அடுத்தப் படத்தை சூர்யா சாருடன் பண்ணுகிறேன். எல்லாரும் பார்க்கக்கூடிய சந்தோஷமான படமாக இந்த படம் அமையும். இந்த படம் தொடர்பான மேலதிக தகவல்களை இப்போது கூற முடியாது.

    விஜய் சாரும் நானும் ரெகுலராக சந்திக்கிறோம், பேசுகிறோம். அவருடன் படம் பண்ணுவதற்கான பேச்சு வார்த்தைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. நல்லதே நடக்கும். என்னுடைய எல்லா படங்களையும் பார்த்து விஜய் சார் பாராட்டியுள்ளார். எனது படங்களை மிகவும் ரசித்துள்ளார். வேதாளம் படத்தை பார்த்து விட்டு என்னை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். அவருடனான நட்பு ரொம்ப அழகானது, ஆழமானது. இவ்வாறு அவர் கூறினார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: