Home /News /entertainment /

Exclusive : விருமன் படத்தின் மூலம் பாடகியாகவும் சினிமாவில் அறிமுகம்… அனுபவம் பகிர்ந்த அதிதி ஷங்கர்

Exclusive : விருமன் படத்தின் மூலம் பாடகியாகவும் சினிமாவில் அறிமுகம்… அனுபவம் பகிர்ந்த அதிதி ஷங்கர்

விருமன் படத்தில் கார்த்தி - அதிதி ஷங்கர்

விருமன் படத்தில் கார்த்தி - அதிதி ஷங்கர்

முத்தையா இயக்கியுள்ள விருமன் படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தில் பாடல் மதுர வீரன் என்ற பாடலைப் பாடி, பாடகியாகவும் அறிமுகமாகியிருக்கிறார்.

    விருமன் திரைப்படம் இந்த வாரம் வெள்ளியன்று திரைக்கு வரவுள்ளது. இந்த படம் குறித்து கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர். அதில் அதிதி ஷங்கர் கூறியதாவது-

    பேட்டியின்போது நடிகை அதிதி ஷங்கர்


    நான் பாடுவேன் என்பது விருமன் பட தயாரிப்பாளர் ராஜா சாருக்கு தெரியும். அவர் யுவனிடம் அதிதி பாடுவார் என்று கூறியுள்ளார். நானும் பாடல் இருந்தால் கொடுங்கள் என்று கூறினேன். யுவனும் நிச்சயமாக என்று பதில் அளித்தார்.

    ஜெயிலர் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்டை தெரிவித்த ரஜினி!

    தெலுங்கில் நான் காதல் பாடல் ஒன்றை பாடியிருக்கிறேன். விருமன் படத்திலிருந்து பாடலை பாடுவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த படத்தில் ஒரு கிராமத்துப் பாடலை பாடும் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    இவ்வாறு அதிதி கூறினார்.

    நேர்காணல் வீடியோவை பார்க்க...



    விருமன் படத்தில் பாடல்கள் குறித்து பேசிய கார்த்தி, ‘யுவனுடன் இணைந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளன. விருமன் பாடல்களும் நன்றாக வந்துள்ளது.

    Varisu: விஜய்யின் வாரிசு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    ஓப்பனிங் சாங்கை சினேகன் சார் எழுதியுள்ளார். இந்தப் பாடலை கேட்டாலே புல்லரிக்கும். அப்படி ஓப்பனிங் சாங் உருவாகியுள்ளது. உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விருமன் படத்தின் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. டைட்டில் சாங்கை இளையராஜா பாடியுள்ளார்.’ என்றார்.

    முத்தையா இயக்கியுள்ள விருமன் படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி