ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசுல சிம்பு மட்டுல்ல.. இன்னொரு ஸ்டாரும் பாடியிருக்காங்க... வெளியான டிராக்லிஸ்ட்

வாரிசுல சிம்பு மட்டுல்ல.. இன்னொரு ஸ்டாரும் பாடியிருக்காங்க... வெளியான டிராக்லிஸ்ட்

வாரிசு

வாரிசு

Varisu Vijay | ஷங்கர் மகாதேவன் பாடிய பூங்கொடி பூபதி பாடலானது, ஆள்தோட்ட பூபதி பாடலின் ரீமிக்ஸ் என்று கூறப்படுகிறது. ஆள்தோட்ட பூபதி பாடலையும் ஷங்கர் மகாதேவனே பாடியிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் வாரிசு படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் மற்றும் மானசி பாடிய ரஞ்சிதமே, சிம்பு பாடிய தீ தளபதி, சித்ரா பாடிய சோல் ஆஃப் வாரிசு பாடல்கள் வெளியான நிலையில் மீதமுள்ள மூன்று பாடல்கள் இன்று வெளியாகின்றன.

இதில் ஹைலைட்டாக அனிருத் பாடிய பாஸ் ரிட்டர்ன்ஸ் என்ற பாடல் இன்று வெளியாகவிருக்கிறது. இது படத்தின் தீம் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்ககப்படுகிறது.

இதையும் படிக்க | விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழா: பரபரப்பாக தயாராகும் மேடை... கியூட்டாக வந்த ராஷ்மிகா... பட்டைய கிளப்பும் தமன்

அடுத்ததாக பாடலாக ஷங்கர் மகாதேவன் பாடிய பூங்கொடி பூபதி என்ற பாடலும், சித் ஸ்ரீராம், ஜோனிதா காந்தி பாடிய பாடலும் இன்று வெளியாகின்றன. இதில் ஷங்கர் மகாதேவன் பாடிய பூங்கொடி பூபதி பாடலானது, ஆள்தோட்ட பூபதி பாடலின் ரீமிக்ஸ் என்று கூறப்படுகிறது. ஆள்தோட்ட பூபதி பாடலையும் ஷங்கர் மகாதேவனே பாடியிருந்தார்.

பீஸ்ட் படத்துக்கு சில காரணங்களால் இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. இதனால் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு விஜய் பேசவிருப்பதைக் கேட்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அஜித் குறித்தும், துணிவு குறித்தும் விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் டிரெய்லரும் வெளியாகலாம்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Varisu