Ram Gopal Varma: ‘எல்லாமே ட்ராமா’ - பவன் கல்யாணை கலாய்த்த ராம் கோபால் வர்மா

Ram Gopal Varma: ‘எல்லாமே ட்ராமா’ - பவன் கல்யாணை கலாய்த்த ராம் கோபால் வர்மா

பவன் கல்யாண் - ராம் கோபால் வர்மா

தெலுங்கின் முன்னணி நடிகர், அரசியல்வாதி பவன் கல்யாணை சமூகவலைத்தளத்தில் கலாய்த்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.

  • Share this:
    தெலுங்கின் முன்னணி நடிகர், அரசியல்வாதி பவன் கல்யாணை சமூகவலைத்தளத்தில் கலாய்த்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.

    சத்யா, ரங்கீலா, கம்பெனி, சர்க்கார், சர்க்கார் ராஜ் உள்பட ஏராளமான கல்ட் கிளாஸிக்குகளை தந்தவர் ராம் கோபால் வர்மா. நிழலுலகம் குறித்து அவரைத்தாண்டி படமெடுக்க இங்கே யாருமில்லை. ஆனால், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நிலைமை தலைகீழ். மாதம் ஒரு படம் வீதம் படங்களாக இயக்கித்தள்ளினார். இதில் எதுவும் ஓடவில்லை. அதே நேரம் சின்ன பட்ஜெட் என்பதால் பெரிதாக கையை கடிக்கவும் இல்லை. அவர் இயக்கியிருக்கும் புதிய ஹாரர் திரைப்படம் சென்றவாரம் வெளியாகி வந்த சுவடே இல்லாமல் வெளியேறியது.

    பார்ட் டைமாக படம் இயக்கும் வர்மா, முழுநேரமாக பிரபலங்களை வம்புக்கிழுப்பதை ஹாபியாக கொண்டிருக்கிறார். இவர் என்றில்லை, எவரையும் வம்புக்கிழுப்பது வர்மா ஸ்டைல். ஆந்திரா, தெலுங்கானாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் பவன் கல்யாணை யார் விமர்சித்தாலும் வீடு புகுந்து தாக்குவார்கள் அவரது ரசிகர்கள்.



    இந்நிலையில், கொரோனா பாதித்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக, சிகிச்சை எடுக்கும் புகைப்படம் ஒன்றை சில தினங்கள் முன்பு வெளியிட்டிருந்தார் பவன் கல்யாண். அந்தப் படத்தை பகிர்ந்திருக்கும் வர்மா, "இந்த புகைப்படத்தில் எது போலியாக இருக்கிறது என்று எனக்கு தெரியப்படுத்துங்கள். சரியாக கண்டுபிடித்துத் தருகிறவர்களுக்கு பரிசு தருவேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "இந்த ஆர்ட் டைரக்ஷன் அமைப்பில் ஏதோ தவறாக தெரிகிறது. ராஜமவுலி சார் தயவுசெய்து உங்க ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலை கேட்டு எனக்கு சொல்லுங்கள்" என்று ராஜமவுலியையும் இழுத்துவிட்டுள்ளார். வர்மாவின் இந்த ட்வீட்டால் பவன் கல்யாண் ரசிகர்கள் கொதித்துப் போய் உள்ளனர்.

    சில தினங்கள் முன்பு வர்மா அளித்த பேட்டியொன்றில் பவன் கல்யாணை ஏன் இயக்கவில்லை என்பதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். பவன் கல்யாணின் மாஸ் இமேஜ் காரணமாகவே அவரை இயக்கவில்லை. ஹீரோயிசத்தை கொண்டாடும் கதைகளை தான் எடுப்பதில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: