ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''மூக்கு ஆபரேஷன்.. உடல் மாற்றத்துக்கு உரிமை உண்டு'' - பளீரென பேசிய ஸ்ருதிஹாசன்!

''மூக்கு ஆபரேஷன்.. உடல் மாற்றத்துக்கு உரிமை உண்டு'' - பளீரென பேசிய ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

நீங்கள் எதை ஒன்றை செய்ய விரும்புகிறீர்களோ, அதை செய்யுங்கள். செய்ய விரும்பவில்லையா? அதனை செய்ய வேண்டாம். அது உங்களுடைய விருப்பம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஒவ்வொரு நபருக்கும், அவர்களது உடலில் மாற்றங்களை செய்யக் கூடிய உரிமை உள்ளது என்று நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

  இதுதொடர்பாக இதழ் ஒன்றுக்கு ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

  ’’நான் எனது மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். எனது மூக்கு உடைந்ததுடன், அது சற்று வித்தியாசமாக காணப்பட்டது. எனது முகத்தை என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய உரிமை எனக்கு இருக்கிறது.

  ஒவ்வொரு நபருக்கும், அவர்களது உடலில் மாற்றங்களை செய்யக் கூடிய உரிமை உள்ளது. இதற்காக நான் அழகு கலை பொருட்களை, ஊக்ப் படுத்துகிறேன் என்று அர்த்தம் கிடையாது. நீங்கள் எதை ஒன்றை செய்ய விரும்புகிறீர்களோ, அதை செய்யுங்கள். செய்ய விரும்பவில்லையா? அதனை செய்ய வேண்டாம். அது உங்களுடைய விருப்பம்

  ‘ஸ்ருதி ஹாசன் நடிகை போன்று தோற்றம் அளிக்கவில்லை’ என்று முன்பு என்னை கிண்டல் செய்தார்கள். ‘ஸ்ருதிஹாசன் நல்ல திறமை உள்ளவர் தான் ஆனால் அவர் இந்தியரை போன்று தோற்றம் அளிக்கவில்லை’ என்றார்கள். அதே நேரத்தில் நான் நடித்த பெரும்பாலான படங்களில், நான் கிராமத்து ஹீரோயின் கேரக்டரில் இடம் பெற்றேன். இது என்னை மிகவும் குழப்பம் அடையச் செய்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Shruti Haasan (@shrutzhaasan)  கடந்த 2020ஆம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். அவர் தனது பதிவில், ‘இது என்னுடைய வாழ்க்கை. என்னுடைய முகம். நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன். இதனை நான் அவமானமாக உணரவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி நான் ஆதரிக்கிறேன் அல்லது இல்லை என, எதுவாக இருந்தாலும் அதை என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு உரியது.

  Srutanjay Narayanan: திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக பிரபல நடிகரின் மகன்... குவியும் வாழ்த்துகள்!

  அன்பைப் பரப்புங்கள்; கொஞ்சம் நிதானமாக இருங்கள். எனக்காக இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக என்னை நேசிக்க நான் தினமும் கற்றுக்கொள்கிறேன். நமக்கும் மற்றவர்களுக்கும் நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி என்னவென்றால், நம் உடல் மற்றும் மனதின் மாற்றங்களை ஏற்க கற்றுக்கொள்வதுதான்’ என்று கூறியிருந்தார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Shruthihassan