• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இயல்புநிலைக்கு திரும்பிய தியேட்டர்கள்.. இன்று 9 திரைப்படங்கள் ரிலீஸ்!

இயல்புநிலைக்கு திரும்பிய தியேட்டர்கள்.. இன்று 9 திரைப்படங்கள் ரிலீஸ்!

தியேட்டர்

தியேட்டர்

இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு 9 திரைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமா மீண்டும் சகஜ நிலையை எட்டியுள்ளதை நிரூபித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
திரையரங்குகளுக்கு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் தமிழ் சினிமாவில் மீண்டும் திரைப்படங்களில் ரிலீஸ் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஏறத்தாழ 150 நாட்களுக்கும் மேலாக முடங்கியிருந்த திரையரங்குகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு 50 சதவீத இருக்கை கட்டுப்பாடு, தனிமனித இடைவெளி முக கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மீண்டும் திரையரங்கிற்கு வருவார்களா என்று சந்தேகத்தின் காரணமாக திரைப்படங்கள் வெளியாவதில் சுணக்கம் நிலவி வந்த நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு 9 திரைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமா மீண்டும் சகஜ நிலையை எட்டியுள்ளதை நிரூபித்துள்ளது.

கடந்த வாரம் வெளியான விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான பிரண்ட்ஷிப் ஆகிய திரைப்படங்கள் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பத்ரி இயக்கத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் ரியோ, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் வெளிவந்துள்ளது.

முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் யோகி பாபு நடிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கியுள்ள பேய்மாமா திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. நகைச்சுவை ஹாரர் திரைப்படமான பேய் மாமா படத்தில் ஆரம்பத்தில் வடிவேலு நடிக்க திட்டமிடப் பட்டு பின்னர் இந்த திரைப்படத்தில் யோகி பாபு நடித்துள்ளதால் இந்த திரைப்படமும் ஓரளவு எதிர்பார்ப்பை எட்டியுள்ளது.

லட்சுமி ராய் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து பிரபல ஆங்கில காமிக்ஸ் கதாபாத்திரமான சின்ரெல்லாவை
மையமாக வைத்து உருவாகியுள்ள சின்ரெல்லா திரைப்படம் லக்ஷ்மி ராய்க்கு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கம்பேக் வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை - சீமானை கிண்டல் செய்த சூர்யா படம்...!

இவைத்தவிர சூ-மந்திரகாளி, சின்னஞ்சிறு கிளியே, பிறர் தர வாரா, வீரபுரம் ஆகிய பெரிய பட்ஜெட் திரைப்படங்களும் இந்த வார ரிலீஸ் ஆக திரையை எட்டியுள்ளன. 7 நேரடி திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் பிரபல WWE வீரர் ராக் டுவைன் ஜான்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ஜங்கிள் க்ரூஸ் திரைப்படமும் போட்டிக்கு களமிறங்கியுள்ளது.

இந்தத் திரைப்படம் இந்திய திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது பிரம்மாண்டமாக தயாராகி உள்ளதாலும் பெருமளவு ரசிகர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான DCயின் தயாரிப்பில் வெளியாகும் தி சூசைட் ஸ்குவாட் திரைப்படமும் இன்று தமிழ் திரைகளில் வெளியாகிறது.

கிறுக்குத்தனமான சூப்பர் ஹீரோ செய்யும் நகைச்சுவை கலந்த அதிரடி காட்சிகள் நிரம்பிய இந்த திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாகத்திற்கும் அப்படி ஒரு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் ரசிகர்களின் ஆதரவு இந்த திரைப்படங்களுக்கு வார இறுதியில் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: