ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘20 ஆண்டுகளுக்கு பின்னரும் எனது பாடல் விரும்பப்பட வேண்டும்’ – நியூஸ் 18 நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் பேச்சு

‘20 ஆண்டுகளுக்கு பின்னரும் எனது பாடல் விரும்பப்பட வேண்டும்’ – நியூஸ் 18 நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் பேச்சு

நியூஸ் 18 நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.

நியூஸ் 18 நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.

என்னுடைய முதல் படமான வெயிலில் நான் பணியாற்றியபோது எனக்கு 17 வயது. அந்த படத்திற்கான நான் போட்ட 4 ட்யூன்கள் ஏற்கப்படவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

15-20 ஆண்டுகளுக்கு பின்னரும் தனது பாடல் விரும்பப் பட வேண்டும் என்றும், அதனை மனதில் வைத்து தான் இசையமைக்கிறேன் எனவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

CNN News 18 தொலைக்காட்சியின் ‘சென்னை டவுன் ஹால்’ நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசியதாவது-

தீபாவளியன்று வெளியாகவுள்ள கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் இசைப்பணிகளை இப்போது முடித்துள்ளேன். பாடல்களை வெளியிடுவதில் ட்ரெண்ட் மாறிக்கொண்டே இருக்கிறது.

சொன்ன வாக்கை காப்பாற்றியவர் பாரதிராஜா… கமலின் சுவாரசியமான ட்விட்டர் பதிவு வைரல்

கிரிக்கெட்டில் டெஸ்டில் இருந்து ஒண்டே, ஒண்டேயில் இருந்து 20 ஒவர் போட்டி, இப்போது 20 ஓவர்போட்டிகளில் இருந்து 10 ஓவர் போட்டி என மாறியிருக்கிறது. அதைப் போன்றுதான் பாடல்கள் ரிலீஸ் மாற்றங்களை அடைந்துள்ளது.

ஒரு நிமிட பாடலை வெளியிடுவது இப்போது ட்ரெண்டாக உள்ளது. அதற்குள் நாம் ரசிகர்களை கவரக்கூடியவற்றை வைக்க வேண்டும். படக் படக் பாடல் மூலம் இந்த முறையை நாங்கள் டெஸ்ட் செய்து பார்த்தோம். நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கிறது. முன்பு பாடல்களில் 2 சரணம் இருக்கும்.

' isDesktop="true" id="809054" youtubeid="HAIyVAQ0iXc" category="cinema">

ஃபேஷனாக இருப்பது நான் மிகவும் விரும்பக்கூடிய விஷயங்களில் ஒன்று. பெரும்பாலான இசையமைப்பாளர்கள் ஃபேஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தின் வெளியீடு தள்ளிச் சென்றது…

இப்போது எது ட்ரெண்டாக இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். என்னுடைய முதல் படமான வெயிலில் நான் பணியாற்றியபோது எனக்கு 17 வயது.

அந்த படத்திற்கான நான் போட்ட 4 ட்யூன்கள் ஏற்கப்படவில்லை. 5ஆவதாக போட்ட ட்யூன்தான் வெயிலோடு விளையாடு பாடல்.

15-20 ஆண்டுகளுக்கு பின்னரும் எனது பாடல் விரும்பப் பட வேண்டும் என்பதை மனதில் வைத்து நான் இசையமைக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Published by:Musthak
First published:

Tags: Gv praksh kumar