Home /News /entertainment /

‘பள்ளிகளில் ஒழுக்க நெறிமுறை வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும்’ - இயக்குனர் எஸ்பி முத்துராமன் வலியுறுத்தல்...

‘பள்ளிகளில் ஒழுக்க நெறிமுறை வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும்’ - இயக்குனர் எஸ்பி முத்துராமன் வலியுறுத்தல்...

இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்

இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்

Director SP Muthuraman : தற்போது உள்ள காலகட்டத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கவழக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. – எஸ்.பி. முத்துராமன்

    பள்ளிகளில் ஒழுக்க நெறிமுறை வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரியில் கவியரசு கண்ணதாசன் இலக்கிய கழகத்தின் 10 ஆம் ஆண்டு விழா தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் லக்ஷ்மிநாராயணன், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, மணிமேகலை பிரசுரம் முனைவர் ரவி தமிழ்வாணன் ஆகியோர் கலந்துகொண்டு  திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமனுக்கு கண்ணதாசன் விருது வழங்கி கௌரவித்தனர்.

    விழாவில் ஐந்து பேருக்கு தமிழ் பணி செம்மல் விருது வழங்கப்பட்டது.மேலும் கவிஞர் அம்பாளடியாள் அவர்களின் என் உயிரில் பூத்தவளே எனும் நூல் வெளியிடப்பட்டது.



    விழாவில் திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமன் பேசியதாவது-

    என்னை திரையுலகிற்கு இழுத்தது கலைஞர் எழுதிய பராசக்தி திரைப்படம், என்னுடைய  லட்சியம்   இயக்குனர் ஆவது என்பதில்தான் இருந்தது. அதனால் தான் 20 ஆண்டுகளில் 70 படங்களை இயக்க முடிந்தது.

    இதையும் படிங்க - சாய்பல்லவி திரைப்படத்தை வெளியிடும் சூர்யா

    தற்போது உள்ள காலகட்டத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கவழக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும் அப்போதுதான் வருங்கால சந்ததிகள் வாழ முடியும். அக்காலத்தில் பள்ளிகளில் ஒழுக்க வகுப்புகள் நடைபெற்றன. அதைப் பின்பற்றியதால் தான் வாழ்வில் வெற்றிபெற முடிந்தது.

    தற்போது பள்ளிகளில் ஒழுக்க வகுப்புகள் நடைபெறுவதில்லை. அரசாங்கம் கண்டிப்பாக அனைத்து பள்ளிகளிலும் ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்கும் வகுப்புகள் நடைபெற செய்ய வேண்டும்.

    இதையும் படிங்க - பேக் லெஸ் உடையில் ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்...

    திருவள்ளுவரின் ஒவ்வொரு குறளும் வாழ்க்கையை நெறிப்படுத்தும். என்னையும் நெறிப்படுத்திய ஒரு திருக்குறள். தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். மனிதனுக்கு தவறு செய்யும் சூழல் வரும்போது இந்த திருக்குறளை மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும். இதை மனதில் ஏற்றியதால் தான் இன்றுவரை விமர்சனத்திற்கு ஆளாகாமல் வாழ்ந்து வருகிறேன்.

    வாழ்க்கைக்குத் தேவையானது மாணவர்களின் பாடபுத்தகத்தில் சிறிதளவு தான் உள்ளது. பொது வாழ்வினையும் செய்தித்தாள்களையும் தினசரி மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி