Home /News /entertainment /

எதற்கும் துணிந்தவன் அப்டேட்... படத்தின் கதை குறித்து தகவல் வெளியிட்ட இயக்குனர் பாண்டிராஜன்

எதற்கும் துணிந்தவன் அப்டேட்... படத்தின் கதை குறித்து தகவல் வெளியிட்ட இயக்குனர் பாண்டிராஜன்

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

கொரோனா பாதிப்புகள் தொடர்ந்தால் வெளியீடு தள்ளிப் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சூர்யா படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிகர்களுக்கு 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடைசியாக காப்பான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அதன்பின்னர் எடுக்கப்பட்ட சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் ஓடிடியில் வெளியாகின.

    ஓடிடி தளங்களில் வெளியானபோதிலும் இந்த 2 படங்களும் பல ரிக்கார்டுகளை முறியடித்துள்ளன. குறிப்பாக ஜெய்பீம் தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்றளவும் ஓயாமல் உள்ளது. அந்த திரைப்படம் ஆஸ்கார் விருதை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பிப்ரவரி 4-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் தொடர்ந்தால் வெளியீடு தள்ளிப் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க : தாயார் ஷோபாவுடன் விஜய்... சமூக வலைதளங்களில் வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்

    பசங்க 2, கடைக்குட்டி சிங்கம் படங்களைத் தொடர்ந்து சூரியா இயக்குனர் பாண்டிராஜுடன் 3வது முறையாக இணைந்துள்ளார். இந்தப் படம் குறித்து பாண்டிராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

    மாஸ் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களை எதற்கும் துணிந்தவன் முழுமையாக திருப்திபடுத்தும். கடந்த சில ஆண்டுகளாக கிளாசிக்கான படங்களை சூரியா பண்ணிக் கொண்டிருந்தார். அவருக்கு எதற்கும் துணிந்தவன் ஒரு மாஸ்ஸான படமாக அமையும். அதே நேரம், ஃபேமிலி ஆடியன்ஸ் மற்றும் பொழுதுபோக்கிற்கான அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கிறது. சூரியாவின் முந்தைய படங்களை விட எதற்கும் துணிந்தவன் வித்தியாசமாக இருக்கும். முந்தைய படங்களில் இருந்ததை விட இந்தப் படத்தில் ஹீரோயிசம் தூக்கலாக இருக்கும்.
    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க : விஜய் 66 படத்தின் அப்டேட்டுகளைக் கொடுத்த தயாரிப்பாளர் தில் ராஜு... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

    டி இமான் இசையில் வெளிவந்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளன. யு/ஏ தணிக்கை சான்றிதழை எதற்கும் துணிந்தவன் படம் பெற்றுள்ளது. படத்தில் சூரியாவுடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, சரண், வினய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    அடுத்த செய்தி