Home /News /entertainment /

Etharkkum Thunindhavan : எதற்கும் துணிந்தவன் - மெகா அப்டேட்டை வெளியிட்ட பாண்டிராஜ்

Etharkkum Thunindhavan : எதற்கும் துணிந்தவன் - மெகா அப்டேட்டை வெளியிட்ட பாண்டிராஜ்

சூர்யா

சூர்யா

Etharkkum Thunindhavan Surya Movie : வெற்றிகரமாக முடிந்த எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு..

    சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிவந்த படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படம் குறித்த மெகா அப்டேட்டை அவர் வெளியிட்டுள்ளார். 

    பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் முதல் படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் இதனை தயாரித்துள்ளது. ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்க, வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்;. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தந்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது

    2021 பிப்ரவரி 15 ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. இரண்டாம் அலை தணிந்து ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதும் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். அந்த ஷெட்யூல்ட் ஒன்றரை மாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாக நடந்தது.

    எதற்கும் துணிந்தவன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்ததாக பாண்டிராஜ் தற்போது அறிவித்துள்ளார். அத்துடன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், நாயகன் சூர்யா மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். படம் குறித்த மேலும் அப்டேட்கள் விரைவில் வர இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


    also read : நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரபுதேவா படம்..

    சன் பிக்சர்ஸ் தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட், சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன், தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இதில் பீஸ்ட் முதலில் வருமா இல்லை எதற்கும் துணிந்தவனா என்ற கேள்வி இருந்தது. எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு முதலில் முடிவடைந்ததால் சூர்யா படமே முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எதற்கும் துணிந்தவனுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம் படத்தில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Actor Surya, Sun pictures

    அடுத்த செய்தி