பாலியல் புகார் கூறிய நடிகை மீது தொழிலதிபர் அவதூறு வழக்கு!

நடிகை இஷா குப்த மீது ரோஹித் விஷ்  தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.

news18
Updated: July 21, 2019, 2:06 PM IST
பாலியல் புகார் கூறிய நடிகை மீது தொழிலதிபர் அவதூறு வழக்கு!
இஷா குப்தா
news18
Updated: July 21, 2019, 2:06 PM IST
தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை இஷா குப்தாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார் டெல்லி தொழிலதிபர்.

பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா சில தினங்களுக்கு முன் டெல்லியில் உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றபோது ஒருவர் தன்னை கண்களால் பலாத்காரம் செய்தார் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவருடைய இந்த பதிவு சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அந்த தொழிலதிபர் டெல்லியைச் சேர்ந்த ரோஹித் விஷ் என்றும் குறிப்பிட்டிருந்தார்Loading...

மேலும் என்னைப் போன்ற பிரபலங்களே பாதுகாப்பில்லை என்று உணரும் போது சாதாரண பெண்களின் நிலை என்ன? எனக்கு துணையாக 2 பாதுகாவலர்கள் இருந்தும் நான் பலாத்காரம் செய்யபட்டதாக உணர்ந்தேன் என்றும் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் நடிகை இஷா குப்தா தன்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புகிறார் என்று டெல்லி நீதிமன்றத்தில் ரோஹித் விஷ் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘நடிகை இஷா குப்தாவின் புகாரால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து என்னை தொடர்பு கொண்டு அதுகுறித்து கேட்டு வருகின்றனர். இதனால் நானும் எனது குடும்பத்தாரும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம். பொதுமக்களும் இஷா குப்தாவின் பொய்யான குற்றச்சாட்டை நம்பி வருகின்றனர். உடனடியாக இதுகுறித்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் நடிகை இஷா குப்தா மீது ரோஹித் விஷ் தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.

Also watch

First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...