ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எருமை சாணி புகழ் விஜய்க்கு கல்யாணம்.. பொண்ணு இவங்க தான்!

எருமை சாணி புகழ் விஜய்க்கு கல்யாணம்.. பொண்ணு இவங்க தான்!

எருமை சாணி விஜய்

எருமை சாணி விஜய்

எருமை சாணி சேனலில் விஜய்யுடன் நடித்த ஹரிஜாவும் இவர்களுக்கு  செம்ம க்யூட்டாக வாழ்த்துக்களை ஷேர் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    எருமை சாணி யூடியூப் சேனல் புகழ் விஜய்க்கு கூடிய விரைவில் திருமணம். இதுக் குறித்து அவரே தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார்.

    எருமை சாணி என்ற யூடியூப் விடியோக்கள் மூலம் பலரின் இதயங்களில் குடியேறியவர் நடிகர் விஜய். இவரின் நகைச்சுவை பேச்சு,நடிப்பு  ஆகியவை ரசிகர்களுக்கு பிடித்து போக குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக பிடிக்க அடுத்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். ஹிப் பாப் தமிழா ஆதி நடித்த மீசையை முறுக்கு, நான் சிரித்தால் போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் விஜய் நடித்து இருந்தார். அதன் பின்பு அவரின் கவனம் இயக்கம் பக்கம் சென்றது. இந்தாண்டு வெளியான டி பிளாக் படத்தை எழுதி இயக்கி இருந்தார் விஜய்.

    வேற லெவல் ரீச்.. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் டுடே டிரெய்லர்!

    அருள்நிதி இந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். டி பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் அருள் நிதியின் நண்பராக விஜய்யும் சேர்ந்து நடித்து இருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் விஜய் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்துக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. அதாவது தனது நீண்ட நாள் காதலியான நட்சத்திராவை கூடிய விரைவில் விஜய் கரம் பிடிக்கவுள்ளார். ’பொண்ணு பாக்குற மொமண்ட ’என்ற கேப்ஷனுடன் நட்சத்திரா வீட்டில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை விஜய் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.




     




    View this post on Instagram





     

    A post shared by Eruma saani Vijay (@vijayviruz)



    விஜய் மட்டுமில்லை நட்சத்திராவும் மீடியாவில் தான் இருக்கிறார். மாடலிங், விலாகர், ஃபேஷன் டிசைனர் என பலமுகங்களை கொண்டவர் நட்சத்திரா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாவில் வெளியிடுவார்கள். ரசிகர்கள் அனைவரும் எப்ப கல்யாணம்? என கேட்டு வந்தனர் அதற்கு தற்போது பதில் கிடைத்து விட்டது.




     




    View this post on Instagram





     

    A post shared by Eruma saani Vijay (@vijayviruz)



    இருவருக்கும் எளிமையான முறையில் வீட்டில் நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. இதற்கு இருவரின் நண்பர்களும், மீடியா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர். எருமை சாணி சேனலில் விஜய்யுடன் நடித்த ஹரிஜாவும் இவர்களுக்கு  செம்ம க்யூட்டாக வாழ்த்துக்களை ஷேர் செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: Tamil Cinema, Trending, Youtube