Arulnithi: யூ-ட்யூப் பிரபலத்தின் இயக்கத்தில் நடிக்கும் அருள்நிதி! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...

அருள்நிதி

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடிக்கிறார்.

  • Share this:
    ’எருமசாணி’ விஜய் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    இணையத்தில் தங்கள் திறமைகளை நிரூபித்து அதன் மூலம் பெரிய வாய்ப்புகளை அடைந்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராம், டிக்டாக் மூலமாக பலர் தங்கள் நடிப்பு திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள். இதில் யூ-ட்யூபும் பெரும் பங்கு வகிக்கிறது. நடிப்பு, இயக்கம் என பன்முக திறமைகளை அதில் வெளிக்காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் யதார்த்தமாக இன்றைய கால நடைமுறையை காமெடியாக சொல்லி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டவர்கள் எரும சாணி யூ-ட்யூப் சேனல் குழுவினர். அதில் நடித்த விஜய், ’நட்பே துணை’ மற்றும் ’நான் சிரித்தால்’ ஆகிய படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். அதோடு அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் எருமசாணி புகழ் விஜய் தற்போது இயக்குனராக களம் இறங்குகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘D பிளாக்’ என பெயர் வைத்துள்ளனர்.

    எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் அருள் நிதி, இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதே, படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: