எனது கணவர் அப்பாவி; பாலியல் ஆசையைத் தூண்டும் படங்களே எடுத்தார்: ஷில்பா ஷெட்டி

எனது கணவர் அப்பாவி; பாலியல் ஆசையைத் தூண்டும் படங்களே எடுத்தார்: ஷில்பா ஷெட்டி

கணவர் ஆபாச படங்களை தயாரித்து வெளியிடுவது குறித்து ஷில்பா ஷெட்டிக்கு எதேனும் விவரம் தெரியுமா என்ற நோக்கில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 • Share this:
  எனது கணவர் அப்பாவி, அவர் பாலியல் ஆசையைத் தூண்டும் வகையிலான படங்களைத்தான் எடுத்தார். ஆபாச படங்கள் எடுக்கவில்லைஎன நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து, வெளியிட்ட குற்றத்திற்காக அண்மையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தொழிலதிபரான ராஜ் குந்த்ரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பங்குதாரர் ஆகவும் இருக்கிறார். இவர் கட்டுமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் ராஜ் குந்த்ரா ‘JL Media’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை நிறுவி அதில் வெப் சீரீஸ்களை தயாரித்து வழங்கி வருகிறார்.

  Also read: அமலா பால் ஹாட் புகைப்படங்கள்.. பிரேம்ஜி கமெண்ட் - கடுப்பான ரசிகர்கள்

  இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஆபாச படங்களை உருவாக்கி அதனை மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கும்படி வெளியிடுகிறார்கள் என புகார் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாக கொண்டு தீவிரமாக விசாரித்த போது இந்த ஆபாச பட உருவாக்கத்திலும், அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிடுவதிலும் முக்கிய நபராக ராஜ் குந்த்ரா இருப்பது தெரிய வந்தது. அதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுக்கு நம்பகமான ஆதாரங்களை திரட்டி வந்த போலீசார் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.

  இந்தநிலையில் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து ராஜ் குந்த்ரா நேற்று மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் தரப்பில் அவரது காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, குந்த்ராவின் போலீஸ் காவலை வருகிற 27ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

  இதனிடையே நேற்று போலீசார் இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அதில் தனது கணவர் ராஜ் குந்த்ரா நிரபராதி என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

  Also read: நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது - விஷால் ட்வீட்

  மேலும், ஹாட்ஷாட் செயலியில் உள்ள வீடியோக்களின் சரியான தன்மை குறித்து எனக்குத் தெரியாது. ஹாட்ஷாட் செயலிக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து, போலீசாரிடம் அவர், பாலியல் ஆசையைத் தூண்டும் நோக்கம் கொண்ட பாலியல் படங்களுக்கும், ஆபாச படங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை விவரித்துள்ளார். மேலும் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரிப்பதில் ஈடுபடவில்லை. அவர் ஒரு அப்பாவி என கூறியுள்ளார்.

  கணவர் ஆபாச படங்களை தயாரித்து வெளியிடுவது குறித்து ஷில்பா ஷெட்டிக்கு எதேனும் விவரம் தெரியுமா என்ற நோக்கில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
  Published by:Esakki Raja
  First published: