சினிமா என்னும் கனவுதேசத்தில் ஆயிரம் சிறகுகளுடன் பறக்க தயாராகி, அப்போதே சிறகொடிந்து 20 ஆண்டுகளாக படுக்கையில் இருக்கும் என்னுயிர் தோழன் பாபுவை பற்றி இங்கே குறிப்பிடுகிறோம்.
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தனது அழகான ஒரு பக்கத்தை மட்டுமே காட்டும் சினிமா என்னும் மாயதேசத்தின் மறுபக்கம் வலிகளும் வேதனைகளும் நிறைந்தது என்பது திரை வரலாறு எழுதிய பாடம். அவ்வலிகளையும் வேதனைகளையும் சுமந்த ஒரு ஜீவன் தான் நடிகர் பாபு. இவரை ’என்னுயிர் தோழன் பாபு’ என்றால் தமிழக மக்கள் அறிவர். பாரதிராஜா இயக்கத்தில் 1990-ம் ஆண்டு வெளியான ‘என் உயிர் தோழன்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு.
நடிப்பும் துடிப்பும் நிறைந்து தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுவையே தன் படமான என்னுயிர் தோழனில் நாயகனாக நடிக்க வைத்திருந்தார் பாரதிராஜா. தென்னவன், ரமா, ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தில் தர்மன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பாபு. அரசியல் திரைப்படமான இதில் கட்சித் தொண்டனாக வாழ்ந்திருந்து திரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார் பாபு.
’என்னுயிர் தோழன்’ திரைப்படத்திற்கு பிறகு ’என்னுயிர் தோழன் பாபு’ என்றே திரையுலகால் அழைக்கப்பட்டார். அடுத்து விக்கிரமன் இயக்கத்தில் வந்த பெரும்புள்ளி திரைப்படத்தின் கதாநாயகனும் ஆனார் பாபு. இத்திரைப்படத்தின் ‘மனசும் மனசும் சேர்ந்தாச்சு பூமாலை தான்’ பாடல் அப்போது எங்கெங்கும் ஒலித்தது.
தொடர்ந்து தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகனாக பாபு வலம் வர தயாரானபோது தான் அச்சம்பவம் நடந்தேறியது. 'மனசார வாழ்த்துங்களேன்' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு சண்டைக் காட்சியில், உயரமான இடத்திலிருந்து பாபு குதிக்க வேண்டுமாய் இருந்தது. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று பாபுவை எல்லோரும் எச்சரித்தனர். டூப்பும் ரெடியானார். ஆனால், ’நானே குதிக்கிறேன்’ என சொல்லி குதித்தார் பாபு. அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத அந்த அசம்பாவிதம் நடந்தது. டைமிங் மிஸ்ஸானதில் தவறி வேறு இடத்தில் விழுந்ததில் அவருடைய முதுகெலும்பு நொறுங்கியதில், அவருடைய ஆயிரம் சினிமா கனவுகளும் அதோடு நொறுங்கியது.
பாலிவுட்டில் எண்ட்ரியாகும் சமந்தா? ஹீரோ யார் தெரியுமா?
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குணமாக்க முடியவில்லையாதலால் படுத்த படுக்கையாக எழுந்து நடக்க முடியாத நிலைக்கு ஆளானார் பாபு. 20 அண்டுகளுக்கு மேலாக தற்போது வரை மருத்துவமனையில் படுத்த படுகையாக இருந்து சிகிச்சை பெற்று வரும் பாபுவை பார்த்து கண்ணீர் வடித்தது திரையுலகம். சில நாட்களுக்கு முன் அவரது குரு பாரதிராஜா ஆளே அடையாளம் தெரியாமல் உருகுலைந்து போய் கிடக்கும் பாபுவை நேரில் சந்தித்து கண் கலங்கிய காட்சியும் வைரலாகி நெகிழ வைத்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
90’ஸ் கிட்ஸ்களின் மினி பஸ் பயணத்தை இனிமையாக்கிய பாடல்கள்!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அறிமுகங்கள் என்றாலே தமிழ்திரையுலகை ஒரு கலக்கு கலக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள். அப்படியிருக்க ஒரு படத்திலேயே மொத்த வித்தையையும் காண்பித்த என்னுயிர் தோழன் பாபு தமிழ் சினிமாவிற்கு என்றும் ‘அதனுயிர் தோழன்’ தான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.