’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் யூ-ட்யூபில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது. இப்பாடல் யூ-ட்யூபில் வெளியாகி 2 வாரங்களை கடந்திருக்கும் நிலையில், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Thalaivi Trailer: தலைவி ட்ரைலர் வெளியீட்டு படங்கள்!
'உசுரு நரம்புல’ இறுதிச்சுற்று, ‘கண்ணம்மா’ (காலா), ’ரவுடி பேபி’ (மாரி 2), ’காட்டுப்பயலே’ (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் தீ. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
காலா படத்தில் ‘உரிமை மீட்போம்’, வட சென்னை படத்தில் ‘மத்திய சிறையிலே’, மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரெய்டு’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் ரேப் பாடகர் அறிவு. தற்போது இவர்கள் இருவரும் இணைந்துப் பாடியிருக்கும் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் இப்பாடல் உருவாகியுள்ளது. நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
VJ Rakshan: சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் குக் வித் கோமளி ரக்ஷன் – வைரல் படங்கள்!
இந்தப் பாடலை ரசிகர்கள் மட்டுமல்ல, பிரபலங்களும் கொண்டாடி தீர்த்தனர். அதோடு அமுல் நிறுவனம், தீ மற்றும் அறிவு இருவரையும் கார்ட்டூனாக சித்தரித்து சிறப்பித்தது. இந்நிலையில் ’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தற்போது யூ-ட்யூபில் 50 மில்லியன் (5 கோடி) பார்வையாளர்களைக் கடந்துள்ளது!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Cinema