முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஐட்டம் சாங் கேட்டார்கள்... ஶ்ரீதேவி படத்தில் இவ்வளவு பிரச்னை - 10 வருட சோகத்தை போட்டுடைத்த இயக்குநர்!

ஐட்டம் சாங் கேட்டார்கள்... ஶ்ரீதேவி படத்தில் இவ்வளவு பிரச்னை - 10 வருட சோகத்தை போட்டுடைத்த இயக்குநர்!

ஸ்ரீதேவி - கெளரி ஷிண்டே

ஸ்ரீதேவி - கெளரி ஷிண்டே

ஸ்ரீதேவி நடனமாட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். குறிப்பாக அவர் ஐட்டம் சாங் நடனமாட வேண்டும் என்று நினைத்தார்கள்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கௌரி ஷிண்டே இயக்குநராக அறிமுகமான இங்கிலீஷ் விங்கிலீஷ், வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. வணிகரீதியாகவோ அல்லது விமர்சன ரீதியாகவோ மட்டுமின்றி- பல பள்ளிகள் தங்கள் மாணவர்களை திரையரங்குகளுக்கு இந்தப் படத்தைப் பார்க்க அழைத்துச் சென்றன. பெண்கள் சுய தொழிலைத் தொடங்க உத்வேகம் தந்தது என, இது ஏற்படுத்திய கலாச்சார மாற்றத்தை பட்டியலிடலாம்.

படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழிந்த நிலையில், இயக்குநருக்கு இவை அனைத்தும் நினைவில் இல்லை என்றாலும், படத்தின் உருவாக்கம் அவரது மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது.

”ஒரு பெண் கதாநாயகியுடன் எனது படத்தை உருவாக்குவதற்கான எனது முடிவு நிறைய எதிர்ப்பை சந்தித்தது. சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த படத்தை இயக்குவது கடினமான விஷயம். அதுவும் சேலை அணிந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பற்றியது. யாரும் அதை விரும்பவில்லை. வன்முறையோ, செக்ஸ் காட்சிகளோ படத்தில் இல்லை என பல காரணங்களால் நாங்கள் நரகத்தில் இருந்ததைப் போல உணர்ந்தோம்.

அவர்கள் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவரை ஸ்ரீதேவியின் கணவராக நடிக்க வைக்க விரும்பினர். பின்னர் நியூயார்க்கில் படமாக்காமல், நான் சமரசம் செய்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். ஸ்ரீதேவி நடனமாட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். குறிப்பாக அவர் ஐட்டம் சாங் நடனமாட வேண்டும் என்று நினைத்தார்கள், ஏனென்றால் அவர் ஸ்ரீதேவி. அதற்கு பதில் நான் படத்தை கைவிடுகிறேன் என்றேன். பின்னர் பால்கி (திரைப்பட இயக்குநர் - கெளரியின் கணவர்) அதை நாமே தயாரிக்கலாம் என்றார். அப்படித்தான் எங்கள் தயாரிப்பு நிறுவனம் உருவானது” என இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் நினைவுகளை பிரபல ஆங்கில ஊடகத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

முன்னணி நடிகர்களின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் சரியாக ஆங்கிலம் பேசத் தெரியாத இல்லத்தரசியை மையப்படுத்தி இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Bollywood