• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இழுபறியில் எனிமி திரையரங்கு வெளியீடு - காரணம் என்ன?

இழுபறியில் எனிமி திரையரங்கு வெளியீடு - காரணம் என்ன?

எனிமி ரிலீஸ்

எனிமி ரிலீஸ்

எனிமியா, அரண்மனை 3-யா என்றால் தமிழக குடும்பங்கள் அரண்மனை 3 படத்தையே தேர்வு செய்யும்.

  • Share this:
    எனிமி திரைப்படம் அக்டோபர் 14-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்தனர். ஆனால், அதற்குப் பிறகு படத்தின் வெளியீடு குறித்து எந்த சத்தமும் இல்லை. எனிமி விஷயத்தில் என்ன நடக்கிறது?

    அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் எனிமி படத்தை இயக்கியுள்ளார். விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். முழுக்க ஆக்ஷன் அதிரடி திரைப்படமாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தை மினி ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 14-ம் தேதி படம் திரையரங்கில் வெளியாகும் என்று அறிவித்தனர். ஆனால், அன்றைய தேதியில் படத்தை வெளியிடும் எண்ணம் தயாரிப்பாளரிடம் இல்லை. அதேநேரம் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது.

    எனிமி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளன. பால்யத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் வளர்ந்த பிறகு ஒருவன் பணத்துக்கு கொலை செய்யும் கொலையாளியாகவும், இன்னொருவன் மளிகைக்கடை வைத்திருப்பவனாகவும் மாறுகிறான். ஒருகட்டத்தில் இருவரும் சந்திக்க வேண்டி வருகிறது. இந்த நேரத்தில் வில்லனின் மனைவியை யாரோ கொன்று விடுகிறார்கள். நாயகன்தான் அதனை செய்திருக்க வேண்டும் என வில்லன் அவனை துரத்துகிறான். இறுதியில் சாகப்போகிற நேரத்தில் கொலை செய்தது ஹீரோ அல்ல என்பதை வில்லன் தெரிந்து கொள்கிறான்.

    அழுத்தமில்லாத கதை, லாஜிக் இல்லாத காட்சிகள், நம்ப முடியாத சண்டைகளின் சங்கமமே எனிமி என்கிறார்கள் படத்தைப் பார்த்தவர்கள். திரையரங்கில் இரண்டுநாள்கூட தாக்குப்பிடிப்பது கடினம். ஆகவே, படத்தை ஓடிடியில் தள்ளிவிடப் பார்க்கிறார் தயாரிப்பாளர் என்கிறார்கள். மேலும், ஆர்யா நடித்திருக்கும் அரண்மனை 3, எனிமி வெளியாவதாக அறிவித்த அதே அக்டோபர் 14-ம் தேதி வெளியாகிறது. எனிமியா, அரண்மனை 3-யா என்றால் தமிழக குடும்பங்கள் அரண்மனை 3 படத்தையே தேர்வு செய்யும். எனிமி திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பு தரப்பு மௌனமாக இருக்க இதுவும் முக்கிய காரணம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனிமி எப்போது வெளியீடு? திரையரங்கா இல்லை ஓடிடியா? தயாரிப்பாளரே இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் என்பதே இப்போதைய யதார்த்த நிலவரம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: