விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி திரைப்படம் ஓரளவு ஓடியது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்தது என்பதால் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, கன்னடத்திலும் படத்தை ஓடிடி நிறுவனங்களால் வெளியிட முடியும்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு எனிமி படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகியுள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்களின் ஓடிடி உரிமையை வாங்க நிறுவனங்கள் போட்டிப் போட்டாலும் சமயத்தில் சில படங்கள் தேங்கிப் போகின்றன. அதர்வா நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமையை வெறும் 30 லட்சங்களுக்கு கேட்டிருக்கிறார்கள். சசிகுமாரின் கொம்புவச்ச சிங்கம்டா, ராஜவம்சம் உள்ளிட்ட படங்களும் இலவசமாக கொடுப்பது போல்தான் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை அளித்திருக்கிறார்கள்.
விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி திரைப்படம் ஓரளவு ஓடியது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்தது என்பதால் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, கன்னடத்திலும் படத்தை ஓடிடி நிறுவனங்களால் வெளியிட முடியும். அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள். எனினும் வியாபாரமாகாமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் சோனிலிவ் நிறுவனம் எனிமி படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது.
இன்றைய தேதியில் சோனிலிவ் மற்றும் டிஸ்னி + ஹாட் ஸ்டார் நிறுவனங்கள்தான் அதிக படங்களை வாங்குகின்றன. நெட்பிளிக்ஸ் இந்தியா வெற்றிகள் எதுவும் இல்லாமல் இருப்பது மனஉளைச்சலை தருவதாக நெட்பிளிக்ஸ் சிஇஓ கூறியிருக்கிறார். இத்தனைக்கும் 499 ரூபாயில் இருந்த சந்தாவை 199 ரூபாயாக குறைத்திருக்கிறார்கள். இதேபோல் அனைத்துவித சந்தா கட்டணமும் குறைக்கப்பட்டிருக்கிறது.
சோனிலிவ் சந்தாதாரர்கள் விரைவில் எனிமியை தங்கள் வீடுகளில் கண்டு ரசிக்கலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.