ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Enemy Movie : எனிமி படத்தின் வசூல் இத்தனை கோடிகள்தானா?

Enemy Movie : எனிமி படத்தின் வசூல் இத்தனை கோடிகள்தானா?

எனிமி திரைப்படம்

எனிமி திரைப்படம்

Enemy Movie Theatre Collection : எனிமி படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா ?

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அண்ணாத்த படத்துடன் நேற்று முன்தினம் வெளியான ஒரே முன்னணி நடிகரின் படம் எனிமி. முன்னணி நடிகர்கள் என்று சொல்வதே சரி. எனிமியில் விஷால், ஆர்யா இருவரும் நடித்துள்ளனர்.

  ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கும் எனிமிக்கு பரவலாக நல்ல விமர்சனங்களே கிடைத்தன. அண்ணாத்த ஏற்படுத்திய ஒவ்வாமையில் எனிமியை சற்றுக் கூடுதலாக மீடியாக்கள் கவனித்ததாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. எது எப்படியோ, எனிமிக்கு ஆவரேஜுக்கும் மேலான விமர்சனமே கிடைத்தது. ஆனால், வசூல்...?

  நவம்பர் 4 ஆம் தேதி எனிமி தமிழகத்தில் 3.4 கோடி நெட் வசூலை பெற்றுள்ளது (டிக்கெட் கட்டணம் 100 எனில் அதில் வரி 28 ரூபாய் இருக்கும். நெட் வசூல் என்றால், வரி போக கிடைத்த Nல் என்று பொருள். 100 ரூபாயில் ஒரு டிக்கெட் விற்றால் நெட் வசூல், 72 ரூபாய்) இரண்டாவது நாள் தமிழக அளவில் நெட் வசூல் 3.08 கோடிகள். முதலிரு தினங்களில் எனிமியின் தமிழக வசூல் 6.48 கோடிகள்.

  also read : மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படத்தின் பூஜை படங்கள்..

  தெலுங்கு மாநிலங்களில் எனிமி முதல்நாளில் 1.2 கோடியும், இரண்டாவது நாளில் 0.58 கோடியும் வசூலித்துள்ளது. முதலிரு தினங்களில் ஆந்திரா, தெலுங்கானாவில் எனிமியின் நெட் வசூல் 1.78 கோடிகள்

  ட்ரேட் அனலிஸ்டுகள் வெளியிட்டுள்ள வசூல் கணக்கு இது. தயாரிப்பு தரப்பு இன்னும் வசூலை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Actor Arya, Actor vishal