• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எனிமி படம் வியாபாரம் ஆவதில் சிக்கல் - பழியை அண்ணாத்த மீது போடும் எனிமி தயாரிப்பாளர்

எனிமி படம் வியாபாரம் ஆவதில் சிக்கல் - பழியை அண்ணாத்த மீது போடும் எனிமி தயாரிப்பாளர்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

Annatthe Diwali Release: திரையரங்கு கிடைக்காததற்கு அண்ணத்த படம்தான் காரணம் என பழியை அண்ணாத்த மீது போடுகிறார் எனிமி தயாரிப்பாளர்

  • Share this:
    தீபாவளிக்கு இரண்டேயிரண்டு படங்கள்தான் வெளியாகின்றன. அதற்கே திரையரங்கு கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். எங்க படத்துக்கு திரையரங்கு கிடைக்காததற்கு அண்ணத்த படம்தான் காரணம் என பழியை அண்ணாத்த மீது போடுகிறார் எனிமி தயாரிப்பாளர் வினோத் குமார். 

    முன்பு பண்டிகை நாள்களில் கமல், ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், பிரபு என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஆறு முதல் எட்டுவரை வெளியாகும். சில நேரங்களில் வெளியான அத்தனைப் படங்களும் வெற்றி பெற்ற சரித்திரமும் நடந்திருக்கிறது. ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் முறை வந்த பிறகு இரண்டு படங்கள் பண்டிகை தினத்தில் வெளியானால் அதிகம்

    வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி அண்ணாத்த வெளியாகிறது. இந்த வருட ஆரம்பத்திலேயே அண்ணாத்த தீபாவளி வெளியீடு என சன் பிக்சர்ஸ் அறிவித்துவிட்டது. விஷால், ஆர்யா நடித்திருக்கும் எனிமி படம் அக்டோபர் 14 வெளியாகும் என முதலில் அறிவித்தனர். அந்த நாளில் ஆர்யா நடித்திருந்த அரண்மனை 3 படமும் வெளியாகும் என அறிவித்ததால் எனிமி பின்வாங்கியது. தீபாவளிக்கு வலிமை வெளியாகாது, 2022 பொங்கலுக்கே வெளியாகும் என போனி கபூர் அறிவித்ததும் எனிமி தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்தனர். வலிமை வெளியேறிய வெற்றிடத்தை நாம் நிரப்பலாம் என்ற நப்பாசை

    also read :உலகை ஆளப்போகிறவர் போல் இருக்கிறார்- மாதவன் யாரை சொல்கிறார்? 

    ஆனால், படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை. முதல் காரணம், விஷாலின் சமீபத்திய ஆக்ஷன் படங்கள் எதுவும் ஓடவில்லை. எனிமி ட்ரெய்லரைப் பார்த்தால் விஷாலின் மற்றுமொரு சண்டைப் படம் போலவே உள்ளது. இதனால், மதுரை, திருச்சி, சேலம் தவிர மற்ற ஏரியாக்களில் படம் வியாபாரம் ஆகாமல் இழுபறியில் உள்ளது. அண்ணத்த படத்தை தயாரித்தது சன் பிக்சர்ஸ், வெளியிடுவது உதயநிதியின் ரெட் ஜெயண்ட். அதனால், திரையரங்குகள் தரக்கூடாது என நெருக்கடி தருகிறார்கள், அதனால்தான் எனிமியை யாரும் வாங்கவில்லை என அதன் தயாரிப்பாளர் வினோத் குமார் குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், படத்தின் மீது நம்பிக்கையில்லை, அதனால்தான் யாரும் வாங்கவில்லை என்கிறார்கள். முதலில் 350 திரையரங்குகளில் எனிமியை வெளியிட திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது 250 தியேட்டர்களாவது கிடைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர்

    வினோத் குமார் அண்ணாத்த மீது பழிபோட காரணம், அவர் ஒரு பிஜேபி ஆதரவாளர் என அரசியல்ரீதியாக காரணம் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகள் எனிமிகளுக்கும் நல்லதில்லை, எனிமி படத்துக்கும் நல்லதில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: