• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எனிமி நஷ்டம்... விஷால் படத்தை தயாரிக்க தயங்கும் மினி ஸ்டுடியோ?

எனிமி நஷ்டம்... விஷால் படத்தை தயாரிக்க தயங்கும் மினி ஸ்டுடியோ?

விஷால்

விஷால்

Actor Vishal : மினி ஸ்டுடியோ விஷாலை வைத்து படம் தயாரிக்குமா ?

  • Share this:
எனிமி படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அந்தப் படத்தை தயாரித்த நிறுவனம் மீண்டும் விஷாலை வைத்து படம் தயாரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஷால், ஆர்யா நடிப்பில் தீபாவளிக்கு எனிமி வெளியானது. விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்திருந்தனர். ஆர்.டிராஜசேகர் ஒளிப்பதிவு, தமன் பாடல்கள், பின்னணி இசை சாம் சிஎஸ் என எல்லாமே முன்னணி கலைஞர்கள். அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் படத்தை இயக்கியிருந்தார். மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

ஆக்ஷன் படமான இது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோ வினோத்துக்கு பல கோடிகள் நஷ்டம் என்கின்றன செய்திகள். எனிமி படத்தை முதலில் ஓடிடியில் வெளியிடுவதாகதான் இருந்தனர். அப்படி வெளியிட்டிருந்தால் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்திருக்கும். படவிழாவில் இதனை விஷாலும் குறிப்பிட்டார். எனிமியை தயாரிப்பாளர் ஓடிடியில் வெளியிட்டிருந்தால் பெரிய லாபம் கிடைத்திருக்கும். ஆனால், இந்தப் படத்தை திரையரங்கில்தான் வெளியிட வேண்டும், ரசிகர்கள் திரையரங்கில் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்பியதால் எனிமி திரையரங்கில் வெளியாகிறது என தயாரிப்பாளரை புகழ்ந்து பேசினார். தயாரிப்பாளர் வினோத் குமாரின் அந்த விருப்பம் இப்போது பல கோடிகள் நஷ்டத்தில் வந்து நிற்கிறது.

also read : டிசம்பர் 3 திரையரங்கில் வெளியாகும் 4 தமிழ் படங்கள்..

தற்போது விஷால் வீரமே வாகை சூடும், லத்தி படங்களில் நடித்து வருகிறார். ஜனவரியில் தனது சொந்த தயாரிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை ஆரம்பிக்கிறார். நடிப்பு, இயக்கம் இரண்டும் அவரே. அத்துடன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இதனை எனிமியை தயாரித்த மினி ஸ்டுடியோ வினோத் குமார் தயாரிப்பதாக திட்டம். எனிமி நஷ்டம் காரணமாக ஆதிக் ரவிச்சந்திரன் படம் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. எனிமி நஷ்டத்தை ஈடுசெய்ய, விஷால் தனது சம்பளத்தை குறைக்க வேண்டும் என வினோத் குமார் எதிர்பார்ப்பதால் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல்.விஷால் சம்பளத்தை குறைப்பாரா, மினி ஸ்டுடியோ விஷாலை வைத்து படம் தயாரிக்குமா என்பது இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: