• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • முதலில் அண்ணாத்த பாருங்க - எனிமி இயக்குனர் வேண்டுகோள்!

முதலில் அண்ணாத்த பாருங்க - எனிமி இயக்குனர் வேண்டுகோள்!

இயக்குனர் ஆனந்த் சங்கர்

இயக்குனர் ஆனந்த் சங்கர்

நேற்றுவரை 250 க்கும் அதிகமான திரையரங்குகள் எனிமிக்கு கிடைத்துள்ளன. 280 - 300 திரையரங்குகள் தமிழகத்தில் அதற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தீபாவளிக்கு தமிழில் அண்ணாத்த, எனிமி படங்கள் வெளியாகின்றன. இதில் அண்ணாத்த படத்தை முதலில் பாருங்க என்று எனிமி இயக்குனரே தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கும் அண்ணாத்த படத்துக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. படத்தை தயாரித்தது சன் பிக்சர்ஸ், வெளியிடுவது உதயநிதியின் ரெட் ஜெயண்ட், அதனால்தான் அதிக திரையரங்குகள் என்று அரசியல் காழ்ப்புணர்வுடன் ஒரு குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது. யார் தயாரித்திருந்தாலும், ரஜினி படத்துக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்பதே வரலாறு

அண்ணாத்த படத்துடன் வெளியாகும் எனிமி படத்தின் தயாரிப்பாளர் பாஜக சார்பு கொண்டவர். அதனாலேயே இப்படியொரு வதந்தியை கிளப்புகிறார் என்கிறவர்களும் இருக்கிறார்கள். நேற்றுவரை 250 க்கும் அதிகமான திரையரங்குகள் எனிமிக்கு கிடைத்துள்ளன. 280 - 300 திரையரங்குகள் தமிழகத்தில் அதற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... புத்தம் புதுக்காலை ஆந்தாலஜி இரண்டாம் பாகம் - இயக்குனர்கள் யார் தெரியுமா?

அண்ணாத்த மீது இப்படியொரு அவதூறு பரப்பப்படும் நிலையில், அண்ணாத்த படத்தை முதலில் பார்ப்பேன் என எனிமி முகாமிலிருந்து ஒரு குரல் வந்துள்ளது. அது எனிமி படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர். கடந்த 15 - 20 வருடங்களில் சூப்பர் ஸ்டாரின் படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்கத் தவறியதில்லை. அண்ணாத்தக்கும் அதையே தொடரப் போகிறேன். அனைவரும் அதைத்தான் செய்வார்கள் என்று நம்புகிறேன். தீபாவளிக்கு முதலில் அண்ணாத்தயைப் பார்த்துவிட்டு இரண்டாவது காட்சி எனிமி பாருங்கள் என்று கூறியுள்ளார்.

எனிமி படத்தின் இயக்குனரே முதலில் அண்ணத்த படத்தைத்தான் தீபாவளிக்குப் பார்ப்பேன், பிறகுதான் எனிமி என்கிறார். அப்புறமென்ன... பஞ்சாயத்து முடிஞ்சது, தியேட்டர் கிடைக்கலைன்னு அழுதவங்க எல்லாம் கிளம்புங்கப்பா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: