தென்சென்னை தொகுதியில் பவர்ஸ்டார் பெற்ற வாக்குகள்!

தென்சென்னை தொகுதியில் பவர்ஸ்டார் பெற்ற வாக்குகள்!
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்
  • News18
  • Last Updated: May 23, 2019, 5:37 PM IST
  • Share this:
தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பவர்ஸ்டார் பெற்ற வாக்குகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

2019 நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. வாக்குகள் எண்ணி இன்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

மதியம் 2.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 344 தொகுதிகளிலும், காங்கிரஸ் 93 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 103 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


தமிழகத்தைப் பொருத்தவரை, திமுக 37 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதி தொடர்ந்து இழுபறியில் இருக்கிறது.தென் சென்னை தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் பவர் ஸ்டார் தற்போது வரை 425 வாக்குகளைப் பெற்றுள்ளார். திரையில் ரசிகர்களை சிரிக்க வைத்த பவர் ஸ்டார் தற்போது அரசியல் களத்தில் கால்பதித்து பெற்ற வாக்குகளும் ரசிகர்களிடையே நகைப்புக்குள்ளாகியுள்ளது.தென்சென்னை தொகுதியைப் பொறுத்தவரை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவர் வெற்றி வாய்ப்பு பிரகாசமாயிருக்கிறது.

மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் 13 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

தன்னிகரில்லா ‘தல’அஜித் அறிமுகப்படுத்திய முன்னணி இயக்குநர்கள்!

First published: May 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்