பெண்களிடம் பண மோசடி செய்ததாக புகார்: பிக்பாஸ் மீராமிதுனிடம் போலீசார் திடீர் விசாரணை!

தென்னிந்திய அழகி போட்டியை நடத்துவதாக கூறி மீரா மிதுன்  பல பெண்களிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாக ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

news18
Updated: July 26, 2019, 4:22 PM IST
பெண்களிடம் பண மோசடி செய்ததாக புகார்: பிக்பாஸ் மீராமிதுனிடம் போலீசார் திடீர் விசாரணை!
பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுன்
news18
Updated: July 26, 2019, 4:22 PM IST
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின்  பங்கேற்பாளர் மீரா மிதுனிடம் எழும்பூர் போலீசார் அரைமணி நேரமாக விசாரணை மேற்கொண்ட்ள்ளனர்.

பூந்தமல்லி ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய அழகி பட்டம் வென்ற மீரா மிதுன் 16-வது போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.


இந்த நிலையில், தென்னிந்திய அழகி போட்டியை நடத்துவதாக கூறி மீரா மிதுன்  பல பெண்களிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாக ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Also read... Bigg Boss: பெஸ்ட் பெர்ஃபார்மர் மீரா அல்ல... மது தான்...! பிக்பாஸ் வீட்டில் புதிய பிரச்னை

இதையடுத்து, பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு சென்ற  போலீசார், மீரா மிதுனிடம் விசாரணைக்கான சம்மனை வழங்கினர்.

Loading...

மேலும் புகார் குறித்து அவரிடம் அரை மணி நேரம் விசாரணை நடைபெற்றதாகவும், 10 நாட்களில் உரிய விளக்கம் அளிப்பதாக மீரா மிதுன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Also see...

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...