விஷாலுக்கு ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு!

news18
Updated: August 2, 2019, 4:53 PM IST
விஷாலுக்கு ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு!
விஷால்
news18
Updated: August 2, 2019, 4:53 PM IST
பிடித்தம் செய்த டி.டி.எஸ் வரியை, வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஷாலுக்கு ஜாமினில் வெளி வரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிறுவனம் பணியாளர்களுக்கு வழங்கிய பணத்துக்காக பிடித்தம் செய்த வரியை, நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் வருமான வரித்துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் விஷால் செலுத்தவில்லை.

இதுகுறித்து வருமான வரித்துறை, விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.


இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கு சம்பந்தமாக இன்று (02/08/19) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரித்துறை அனுப்பிய 2வது சம்மன் விஷாலுக்கு வந்து சேரவில்லை என தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் விஷால் நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

Loading...

இதற்கு வருமான வரித்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, நடிகர் விஷாலுக்கு ஜாமினில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Also see...

First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...