ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபல நடிகையின் சொத்துகள் முடக்கம்.. கூடா நட்பால் மார்க்கெட் சரிந்த சோகம்

பிரபல நடிகையின் சொத்துகள் முடக்கம்.. கூடா நட்பால் மார்க்கெட் சரிந்த சோகம்

ரூ.200 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய பிறகு கையொப்பமிட்ட படவாய்ப்புகள் அவரது கையைவிட்டுச் சென்றன.

ரூ.200 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய பிறகு கையொப்பமிட்ட படவாய்ப்புகள் அவரது கையைவிட்டுச் சென்றன.

ரூ.200 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய பிறகு கையொப்பமிட்ட படவாய்ப்புகள் அவரது கையைவிட்டுச் சென்றன.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  பாலிவுட்டில் கொடிகட்டிப்பறக்கும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.. 2009 ஆம் ஆண்டில் அலாவுதின் என்ற இந்திப்படத்தில் நடித்ததன் மூலம் நடிப்புலகத்திற்குள் வந்தார்.

  இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜாக்குலின் நடித்த மர்டர்-2, ரேஸ்-2 ஆகிய படங்களில் கமர்சியலாக வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி முன்னேறினார்.

  2014 ஆண்டு வேகமெடுத்த திரைப் புகழ் 2021 ஆம் ஆண்டு, நண்பர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் 10 மணி நேரம் விசாரணையால் மங்கத்தொடங்கியது

  ரூ.200 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய பிறகு கையொப்பமிட்ட படவாய்ப்புகள் அவரது கையைவிட்டுச் சென்றன.

  2020 ஆம் ஆண்டுவாக்கில், பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் நண்பராக ஜாக்குலினுக்கு அறிமுகமாகியுள்ளார்.

  இருவரும் நெருங்கிய நண்பர்களான பின்னர், நடிகை ஜாக்குலின் மற்றும் சகோதரி, குடும்பத்தினருக்கு சுகேஷ் சந்திரசேகர் கோடி கோடியாக பரிசளித்தார்.

  இதையும் படிங்க - உக்ரைன் நாட்டில் நடிகை ஏஞ்சலினா ஜோலி... போரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

  அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து இருப்பதாக புகார்கள் எழுந்தன.

  ஆனாலும், சுகேஷ் சந்திரசேகருடனான நட்பை ஜாக்குலின் துண்டித்துக் கொள்ளவில்லை.

  கடந்த 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசார் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர்.

  பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.

  இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் பெங்களூரு, சென்னை பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

  இதில், கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  இதையும் படிங்க - அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

  சுகேஷின் பங்களாவுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கிடையில், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சுகேஷ் மீது டெல்லி போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர்.

  இதில் அவர் காதலி லீனா மரியாபாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தனர். மேலும் இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். அவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

  சுகேஷ் முதலில் டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 இல் அவரை தொடர்பு கொள்ள முயன்றார், ஆனால் அவர் யார் என்று தெரியாததால் ஜாக்குலின் அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. பின்னர் சுகேஷ் சந்திரசேகர் தனது ஒப்பனை கலைஞரான ஷான் முத்தத்தின் மூலம் நடிகையுடன் தொடர்பு கொண்டார்.

  ஒப்பனை கலைஞர் நடிகர் சேகர் ரத்ன வேலாவை 'மிக முக்கியமான நபராக' கூறி அவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார் என கூறப்பட்டு உள்ளது.

  ஜாக்குலின் பெர்னாண்டஸ், அமலாக்கத்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், சுகேஷ் சந்திரசேகர் தனக்கு இரண்டு ஜோடி வைர கம்மல்கள், இரண்டு ஹெர்ம்ஸ் வளையல்கள் மற்றும் மூன்று பர்கின் பைகள் மற்றும் ஒரு ஜோடி லூயிஸ் உய்ட்டன் ஷூக்களை கொடுத்ததாக கூறியுள்ளார்.

  சுகேஷ் சந்திரசேகர், வாக்குமூலத்தில், ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொடுத்ததாகக் கூறி உள்ளார்.

  மேலும், சுகேஷ் சந்திரசேகர், அமெரிக்காவில் வசிக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் சகோதரிக்கு 1 லட்சத்து 50,000 அமெரிக்க டாலர் கடனாக வழங்கியுள்ளார். அவருக்கு பி எம் டபிள்யூ எக்ஸ் 5 காரையும் கொடுத்து உள்ளார்.

  ஜாக்குலின் பெர்னாண்டசின் பெற்றோருக்கு மஸராட்டி கார் மற்றும் பஹ்ரைனில் உள்ள அவரது தாயாருக்கு போர்ஷை காரை பரிசாக அளித்துள்ளார்.

  ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகர் தன்னை தமிழகத்தை சேர்ந்த முன்னணி தனியார் தொலைக்காட்சி உரிமையாளர் என்று அறிமுகப்படுத்தியதாக கூறினார்.

  மேலும், தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவர் எனவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் தான், நடிகை ஜாக்குலினுக்கு சொந்தமான ரூ.7.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

  வங்கிகளில் ஜாக்கிலின் செய்திருந்த ரூ.7.12 கோடி டெப்பாசிட்டையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

  கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு ஜாக்லின் - சுகேஷ் நட்பு நல்ல உதாரணம்..

  Published by:Musthak
  First published:

  Tags: Jacqueline Fernandez