Dwayne Johnson: ’ட்வைனி ஜான்சன் அதிபராக வேண்டும்’ - அமெரிக்க மக்கள் விருப்பம்

ட்வைனி ஜான்சன்

சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 46 சதவீத மக்கள் ட்வைனி ஜான்சன் அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் ட்வைனி ஜான்சன் அமெரிக்க அதிபராக ஆவதற்கு 46 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது சமீபத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

    சினிமா நடிகர்களை அரசியல்வாதிகளாக்கும் போக்கு இந்தியாவில் மட்டுமில்லை, அமெரிக்காவிலும் இருக்கிறது. சினிமாவில் நடிகர்களாக, தயாரிப்பாளர்களாக, இயக்குனர்களாக இருந்த பலரும் அமெரிக்க சென்ட் உறுப்பினர்களாகவும், மேயர்களாகவும் ஆகியுள்ளனர். ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடித்து பிறகு அரசியலில் நுழைந்து அதிபரானவர் ரொனால்டு ரீகன். சமீபத்திய உதாரணம் அர்னால்டு ஸ்வாஸ்நேகர். கலிபோர்னிய மேயராக இருமுறை தேர்வு செய்யப்பட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வரிசையில் அமெரிக்க மக்களின் அடுத்தக்குறி, ட்வைனி ஜான்சன். வேர்ல்ட் ரெஸ்ட்லிங் பெடரேஷனில் (WWF) எட்டு வருடங்களுக்கு மேல் தி ராக் என்ற பெயரில் தொழில்முறை மல்யுத்த வீரராக இருந்து, சினிமாவுக்கு வந்தவர் ட்வைனி ஜான்சன். மல்யுத்தத்தில் ஒரு புருவத்தை சுழித்து மறு புருவத்தை உயர்த்தி அவர் காட்டும் மேனரிஸம் உலகப்பிரசித்தம். அதேபோல் அவரது உடற்கட்டு. இந்த இரண்டும் அவரை சினிமா உலகுக்கு இழுத்து வந்தது. தி மம்மி ரிட்டர்ன்ஸ் படத்தில் வில்லன் ஸ்கார்ப்பியன் கிங்காக நடித்தார். அடுத்து வந்த தி ஸ்கார்ப்பியன் கிங்கில் அவர்தான் மைய கதாபாத்திரம். ஆக்ஷன் படங்களிலிருந்து படிப்படியாக அனைத்து வேடங்களையும் செய்யும் நிலையை எட்டினார். பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் சீரிஸ், ஜர்னி 2 - தி மிஸ்டீரியஸ் ஐலெண்ட், ஹெர்குலிஸ், சான் ஆன்ட்ரஸ், ஜுமான்ஜி - வெல்கம் டு தி ஜங்கிள், ராம்பேஜ் போன்ற படங்கள் ஹாலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அவரை உயர்த்தின.

    சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 46 சதவீத மக்கள் ட்வைனி ஜான்சன் அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலளித்துள்ளவர், எனது நாட்டை நான் அதிகம் நேசிக்கிறேன். இந்த நாடு எனக்கு நிறைய தந்திருக்கிறது. அரசியலுக்கு வருவேனா எனத் தெரியாது. ஆனால், இது மக்களின் விருப்பத்தை அடக்கத்துடனும் மரியாதையுடனும் கேட்க வேண்டிய நேரம் இது என தெரிவித்துள்ளார்.

    ட்ரம்பையே ஜனாதிபதியாக்கிய தேசம். ட்வைனி ஜான்சன் அதைவிட சிறந்த தேர்வு தான் சந்தேகமில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: