முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / துர்கா படத்தின் இயக்குனர்களை அறிவித்த ராகவா லாரன்ஸ்...!

துர்கா படத்தின் இயக்குனர்களை அறிவித்த ராகவா லாரன்ஸ்...!

துர்கா

துர்கா

இன்றைய தேதியில் தென்னிந்திய சினிமாவில் அன்பறிவ் மாஸ்டர்கள்தான் முன்னணியில் உள்ளனர். கமலின் விக்ரம் படத்துக்கும் இவர்கள்தான் சண்டைக் காட்சிகள் அமைக்கிறார்கள். இவர்கள் இயக்கும் முதல் படமாக துர்கா இருக்கும்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தனது ஸ்ரீராகவேந்திரா புரெடக்ஷன்ஸின் துர்கா படத்தை இயக்குகிறவர்கள் குறித்த அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்.

அதிகாரம், ருத்ரன் படங்களில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். தனது தம்பி எல்வினை நாயகனாக அறிமுகப்படுத்தும்விதமாக ஒரு படத்தையும் அவர் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். சென்ற வருடம் அக்டோபர் மாதம் இது குறித்த அறிவிப்பை ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருந்தார். இதில் அவர் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்.

இந்தப் படங்கள் தவிர துர்கா என்ற படத்தில் நடிப்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். அவரே படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை துர்கா படத்தை இயக்குகிறவர்களை அறிமுகப்படுத்தினார். இயக்குகிறவர்கள் என பன்மையில் சொல்ல காரணம், இரண்டு பேர் இணைந்து துர்காவை இயக்குகின்றனர். அவர்கள் வேறு யாருமில்லை, பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் (அன்பு, அறிவு).

Also read... பொங்கலுக்கு வெளியாகும் கார்த்தியின் நா பேரு சிவா 2...!

இன்றைய தேதியில் தென்னிந்திய சினிமாவில் அன்பறிவ் மாஸ்டர்கள்தான் முன்னணியில் உள்ளனர். கமலின் விக்ரம் படத்துக்கும் இவர்கள்தான் சண்டைக் காட்சிகள் அமைக்கிறார்கள். இவர்கள் இயக்கும் முதல் படமாக துர்கா இருக்கும்.

Also read... சமந்தாவுக்கு போட்டியாக நடனத்தில் பட்டையை கிளப்பும் ரெஜினா...!

ராகவா லாரன்ஸின் ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஹாரர் படங்களான காஞ்சனா சீரிஸ் அனைத்தும் பிளாக் பஸ்டர் ஹிட்களை தந்தன. அதேபோன்ற ஹாரர் கதையில் துர்கா உருவாவதாக சொல்லப்படுகிறது. விரைவில் படத்தின் நடிக்க இருப்பவர்கள் மற்றும் தொழில்நட்பக் கலைஞர்கள் குறித்து அறிவிக்க இருப்பதாக லாரன்ஸ் கூறியுள்ளார்.

First published:

Tags: Actor Raghava lawrence