Home /News /entertainment /

Dune Oscar 2022: 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ட்யூன்!

Dune Oscar 2022: 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ட்யூன்!

ட்யூன்

ட்யூன்

'Dune' திரைப்படம் 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

    லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது. இதில் 6 விருதுகளை டியூன் திரைப்படம் அள்ளியது.

    திரையுலகில் வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கருக்கு எப்போதுமே எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். அந்த வகையில் கொரோனா பெருந்தொற்றிற்குப் பிறகு இந்தமுறை நேரடியாக நடைப்பெற்றது ஆஸ்கர் விருது வழங்கும் விழா. இதனை Amy Schumer, Regina Hall மற்றும் Wanda Sykes ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

    Oscar 2022: சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற கோடா!

    மொத்தமாக 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கிங் ரிச்சர்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் நடிகர் வில் ஸ்மித். சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா கேஸ்டெய்னுக்கு வழங்கப்பட்டுள்ளது. The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.

    ஆஸ்கர் மேடையில் சக நடிகரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் - பின்னணி இதுதான்

    'Dune' திரைப்படம் 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒலி, சிறந்த ஒரிஜினல் இசை ஆகிய 6 பிரிவுகளில் 'Dune' திரைப்படம் விருதுகளை அள்ளியது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Hollywood

    அடுத்த செய்தி