முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சல்யூட் - ரசிகர்களுக்கு துல்கர் சல்மானின் பொங்கல் ட்ரீட்

சல்யூட் - ரசிகர்களுக்கு துல்கர் சல்மானின் பொங்கல் ட்ரீட்

காட்சி படம்

காட்சி படம்

Dulquer Salman : சல்யூட் த்ரில்லர் திரைப்படம், துல்கர் சல்மான் இதில் போலீசாக நடித்துள்ளார்.

  • Last Updated :

தமிழர்களுக்கு பொங்கல். தெலுங்கு பேசும் மக்களுக்கு சங்கராந்தி. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பண்டிகை. கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் அங்கு பொங்கல் கொண்டாடுவதுண்டு.பொங்கலை முன்னிட்டு தமிழில் வலிமை வெளியாகிறது. தெலுங்கில் ஆர்ஆர்ஆர், பீம்ல நாயக், ராதே ஷ்யாம் என மூன்று படங்கள். மலையாளத்தில்...? நேற்றுவரை கேள்விக்குறியாக இருந்ததை ஆச்சரியக்குறியாக்கியுள்ளார் துல்கர் சல்மான். அவர் நடித்துள்ள சல்யூட் திரைப்படம் 2022 ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது.

சல்யூட்டை ரோஷன் ஆன்ட்ரூ இயக்கியுள்ளார். இவர் 36 வயதினிலே படத்தை இயக்கியவர். 2005 இல் உதயனானு தாரம் படத்தின் மூலம் இயக்குனரான இவர் சல்யூட்டையும் சேர்த்து 11 படங்கள் இயக்கியுள்ளார். இதில் எட்டுப் படங்களுக்கு திரைக்கதை எழுதியவர்கள் பாபி - சஞ்சய். மலையாளத்தின் முன்னணி திரைக்கதை எழுத்தாளர்களான இவர்கள் சல்யூட் படத்தின் திரைக்கதையையும் எழுதியிருக்கிறார்கள். இந்த பதினொரு படங்களில் 4 படங்கள் மோகன்லால் நடித்தவை. மம்முட்டியை வைத்து ரோஷன் ஆன்ட்ரூ இதுவரை ஒரு படமும் இயக்கியதில்லை. அந்த குறையை போக்கும் வகையில் அவரது மகன் நடிப்பில் சல்யூட்டை இயக்கியிருக்கிறார்.

also read : நடிகை சாயிஷாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

top videos

    சல்யூட் த்ரில்லர் திரைப்படம், துல்கர் சல்மான் இதில் போலீசாக நடித்துள்ளார். அவரது முந்தைய திரைப்படம் குருப்பில் அவர் கிரிமினல். இதில் போலீஸ். இரண்டுமே க்ரைம் த்ரில்லர். குருப் படத்தைத் தொடர்ந்து சல்யூட்டையும் துல்கர் சல்மானே தயாரித்துள்ளார். குருப் படம் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றதால் குருப் போலவே சல்யூட்டையும் தமிழில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    First published:

    Tags: Malayalam actor, Movies