Home /News /entertainment /

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'சீதா ராமம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'சீதா ராமம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சீதா ராமம் படத்தில் துல்கர் - மிருணாளினி தாகூர்

சீதா ராமம் படத்தில் துல்கர் - மிருணாளினி தாகூர்

Sita Ramam Release Date : துல்கர் சல்மான் மலையாள நடிகராக இருந்தாலும், தமிழில் அவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியிருக்கும் சீதா ராமம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Lie படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi)  இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சீதா ராமம்.  இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான்,  மிருணாளினி தாகூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1965ஆம் ஆண்டு கதை நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது.  அத்துடன் துல்கர் சல்மான் ஒரு ராணுவ வீரராக நடித்துள்ளார்.

50 கோடி பேர் வாழும் இந்தியாவில் தனக்கென ஒரு உறவு கூட இல்லை என்ற இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சீதா ராமம் என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க - ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளனர்.



துல்கர் சல்மான் மலையாள நடிகராக இருந்தாலும், தமிழில் அவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.  இதையடுத்து அவரது நடிப்பில் சீதா ராமம்  தமிழிலும் வெளியாகிறது.

இதையும் படிங்க - ‘பள்ளிகளில் ஒழுக்க நெறிமுறை வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும்’ - இயக்குனர் எஸ்பி முத்துராமன் வலியுறுத்தல்...

இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 5ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியிடுகின்றனர்.  இதற்கான அறிவிப்பை படத்தின் டீசர் உடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Kollywood

அடுத்த செய்தி