கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்..! - ஓகே கண்மணிக்குப் பிறகு நடந்த துல்கர் மேஜிக்..!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்..! - ஓகே கண்மணிக்குப் பிறகு நடந்த துல்கர் மேஜிக்..!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.
  • Share this:
கடந்த வாரம் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தேசிங்கு பெரியசாமி என்ற புதுமுக இயக்குனர் கைவண்ணத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்சன் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”.

எதிர்பாராத திருப்பங்களுடன் ரொமான்டிக் காமெடியாக உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.


கொள்கைகள் ஏதும் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழும் இளைஞன், தகவல் தொழில்நுட்பங்கள் உதவியுடன் செய்யும் கோக்குமாக்குகளை நேர்த்தியாக படமாக்கியுள்ள படக்குழுவினருக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஓகே கண்மணி திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் துல்கர் சல்மானுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ள இத்திரைப்படம் தெலுங்கிலும் வசூலை குவித்து வர்த்தக ரீதியில் 2020-ஆம் ஆண்டின் ஆகச்சிறந்த வெற்றி படங்களில் ஒன்று என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் முழுநேர நடிகராக அறிமுகமாகி உள்ள இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் நடிப்பு பாராட்டுகளைக் குவித்து வருகிறது.லாஜிக் ஓட்டைகளை மறந்து ரசிகர்கள் சிரிக்கவும், பொழுது போக்கவும் வணிக ரீதியிலான ஒரு வெற்றிப்படமாக அமைந்துள்ள இந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், துல்கர் சல்மானின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படமாக மாறி உள்ளது.

Also see:
First published: March 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading