• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கனடாவில் பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் குருப்...!

கனடாவில் பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் குருப்...!

குருப்

குருப்

குருப் நவம்பர் 12 திரைக்கு வருகிறது. இப்போதே முன்பதிவில் திரையரங்குகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. கனடாவில் படத்தை அச்சாயன்ஸ் ஃபிலிம் ஹவுஸ் வெளியிடுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தி, தமிழ், தெலுங்குப் படங்களைப் போல யுஎஸ், யுகே, கனடா, ஆஸ்ட்ரேலியாவில் அதிக திரையரங்குகளில் மலையாளப் படங்கள் வெளியாவதில்லை. அங்கு மலையாளப் படங்களுக்கான பார்வையாளர்கள் குறைவு. அரபு நாடுகளில் மற்ற மொழிப் படங்களைவிட அதிக திரைகளில் மலையாளப் படங்கள் வெளியாகும். அரபு நாடுகளில் அதிக மலையாளி தொழிலாளர்கள் இருப்பது முக்கிய காரணம். முதல்முறையாக கனடாவில் துல்கர் சல்மானின் குருப் திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது.

கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் கேரளாவில் வெளியாகும் முதல் மலையாள மாஸ் திரைப்படம் குருப். துல்கர் சல்மான் நடிப்பில் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியது. செகண்ட் ஷோ படத்தில் துல்கர் சல்மானை அறிமுகப்படுத்தியவரும் இவரே. செகண்ட் ஷோ இவருக்கும் முதல் படம்

குருப் படத்துக்கு மலையாளிகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுகுமாரன் குருப் வழக்கு கேரளாவில் பிரபலம். இன்சூரன்ஸ் பணத்துக்காக ஒருவரை கொலை செய்து, அது தான் என்று உலகை நம்ப வைத்தவர் சுகுமாரன் குருப். அவர் என்ன ஆனார் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாத மர்மமாக உள்ளது. அவர் தப்பித்து வெளிநாடு சென்றார், தனது குடும்பத்தையும் தன்னோடு அழைத்துக் கொண்டார் என்கிறார்கள். வெளிநாடுகளிலும் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களும்கூட சுகுமாரன் குருப் குறித்து மர்மமாகவே பேசுகின்றனர். மலையாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு ரகசியம் இருக்கும். சுகுமாரன் குருப் ஒட்டு மொத்த கேரளமும் அறியாத ரகசியம்

குருப்பின் கதையை இதற்குமுன்பும் படமாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தீராத கேணி போல் அது குறித்த சுவாரஸியம் ஊறிக்கொண்டே இருக்கிறது. இன்னும் பத்து படங்கள் எடுத்தாலும் அது தீரப்போவதில்லை. குருப் திரைப்படத்தில் இன்னும் ஸ்டைலிஷாக, இன்னும் மாடர்னாக குருப்பின் கதையை சொல்லியிருக்கிறார்கள். படத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள், சுகுமாரன் குருப் என்ன ஆனார் என அறிய மலையாளிகள் உலகம் ஆவலாக உள்ளது.

Also read... ஓடிடி முடிவை உறுதி செய்த மோகன்லால் பட தயாரிப்பாளர்...!

குருப் நவம்பர் 12 திரைக்கு வருகிறது. இப்போதே முன்பதிவில் திரையரங்குகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. கனடாவில் படத்தை அச்சாயன்ஸ் ஃபிலிம் ஹவுஸ் வெளியிடுகிறது. மோகன்லால் படங்கள்கூட இந்தளவு அதிக திரையரங்குகளில் கனடாவில் வெளியானதில்லை என்கிறார்கள். ஓடிடி மூலம் மலையாளப் படங்கள் பிறமொழி பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதும் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: