காஜல் அகர்வால் படத்தின் இயக்குநரான டான்ஸ் மாஸ்டர் பிருந்தா

ஹே சினாமிகா படக்குழு

துல்கர் சல்மான் தமிழ்ப் பாடல் ஒன்றை பாடியிருப்பது இதுவே முதல்முறை.

  • Share this:
டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்தியாவின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவர். கமலின் நம்மவர் படத்தில் நாகேஷின் மகளாகவும் நடித்திருக்கிறார். டான்ஸ் மாஸ்டர்கள் பிரபுதேவா, லாரன்ஸ் வரிசையில் பிருந்தாவும் இயக்குநராகிறார்.

இவர் இயக்கும் படத்துக்கு ஹாய் சினாமிகா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. காஜல் அகர்வால், அதிதி ராவ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் படத்துக்கு இசையமைக்கிறார். அவரது இசையில் முதல் பாடலை பாடியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.

துல்கர் சிறந்த நடிகர் மட்டுமில்லை, பாடகரும்கூட. மலையாள சார்லி படத்தில் இடம்பெறும் சுந்தரி பெண்ணே பாடலை பாடியவர் இவர்தான். ஹைபிட்சில் அமைந்த, பாடுவதற்கு சிரமமான அந்தப் பாடலையே அனாயாசமாக துல்கர் பாடியிருந்தார். அதற்கும் இசை கோவிந்த் வசந்த்தான். இது தவிர வேறு பல படங்களிலும் துல்கர் சல்மான் பாடியுள்ளார். எனினும் அவர் தமிழ்ப் பாடல் ஒன்றை பாடியிருப்பது இதுவே முதல்முறை.
Published by:Sheik Hanifah
First published: