Home /News /entertainment /

பொங்கல் வெளியீட்டிலிருந்து கடைசி பெரிய படமும் பின்வாங்கியது...!

பொங்கல் வெளியீட்டிலிருந்து கடைசி பெரிய படமும் பின்வாங்கியது...!

சல்யூட்

சல்யூட்

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூ இயக்கியிருக்கும் சல்யூட் திரைப்படம் ஜனவரி 14 வெளியாவதாக அறிவித்திருந்தனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
பொங்கலை முன்னிட்டு (தெலுங்கு மக்களுக்கு சங்கராந்தி) தமிழ், தெலுங்கில் வெளியாவதாக இருந்த பெரிய பட்ஜெட் படங்கள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் துல்கர் சல்மானின் சல்யூட் மட்டும் பிடிவாதமாக ஜனவரி 14 திரைக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில், அந்தப் படத்தையும் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பற்றி படரும் நிலையில் பல மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழுநாள் ஊரடங்கு, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையளர்களுக்கு மட்டுமே அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன.

நாளுக்குநாள் இந்த கட்டுப்பாடுகள் அதிகரிக்கின்றனவே தவிர குறைவில்லை. இப்படியொரு சூழலில் படத்தை வெளியிட்டால் போட்ட பணத்தை எடுப்பது கடினம் என்பதால் பொங்கல் வெளியீடாக வரவிருந்த ஆர்ஆர்ஆர், வலிமை, ராதே ஷ்யாம் படங்கள் தங்களின் வெளியீட்டை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தன.

இந்தியில் டிசம்பர் 31 வெளியாவதாக இருந்த ஜெர்சி, ஜனவரி 21 வெளியாவதாக இருந்த பிருத்விராஜ் ஆகிய படங்களும் தள்ளி வைக்கப்பட்டன.

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூ இயக்கியிருக்கும் சல்யூட் திரைப்படம் ஜனவரி 14 வெளியாவதாக அறிவித்திருந்தனர். இதில் துல்கர் சல்மான் போலீசாக நடித்துள்ளார்.

Also read... நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் - படங்கள்!

பாபி - சஞ்சய் திரைக்கதை எழுதியுள்ளனர். சென்ற வருடம் வெளியான துல்கரின் குருப் திரைப்படம் கேரள திரையரங்குகளுக்கு லாபத்தை சம்பாதித்து தந்தது. கேரளாவுக்கு வெளியிலும் படம் வெற்றி பெற்றது. குருப்பை போலவே சல்யூட்டையும் துல்கர் சல்மானே தயாரித்துள்ளார். 2022 இன் முதல் மலையாள ப்ளாக் பஸ்டராக சல்யூட் இருக்கும் என எதிர்பார்த்தனர்.

Also read... நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை - சாய்னா ட்வீட் குறித்து சித்தார்த் விளக்கம்

இந்நிலையில், சல்யூட் பட வெளியீட்டையும் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த  படங்கள் தள்ளிப்போன நிலையில் கடைசியாக இருந்த ஒரே பெரிய படமும் இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி